IPL 2026: கப்-ஐ விடுங்க.. ப்ளே ஆஃப்யே கனவுதான் போல! புயலாய் தொடங்கி புஸ்வானமா போகுதா பஞ்சாப்?

3 weeks ago 4
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்லப்போவது யார்? என்பதற்கான மோதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

புயலாய் தொடங்கி புஸ்வானமான பஞ்சாப்:

கடந்தாண்டு புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர், இளம் பட்டாளத்துடன் ஐபிஎல் களத்திற்குள் வந்த பஞ்சாப் அனைத்து அணிகளுக்கும் கடும் சவால் அளித்து வருகிறது. இந்தாண்டு தொடங்கிய ஐபிஎல் தொடரிலும் எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாக தொடக்கம் முதலே அசத்தி வந்த பஞ்சாப் டெல்லி அணிக்கு எதிராக 264 ரன்களை எட்டிப்பிடித்து மிகப்பெரிய வரலாறு படைத்தது.

ஆனால், அதற்கு அடுத்தடுத்து நடந்த 5 போட்டிகளிலும் தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹைதரபாத், டெல்லி, மும்பை அணி அடுத்தடுத்த தோல்விகளால் தற்போது பஞ்சாப் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பே கேள்விக்குறியாக மாறிவிட்டது.

ப்ளே ஆஃப்-க்கு மல்லுகட்டு:

13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கு மற்ற அணிகளின் முடிவுகளைப் பொறுத்தே அமைந்துள்ளது. ஆர்சிபி, குஜராத் அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்று தங்களது ப்ளே ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணிக்கு இன்னும் 2 போட்டிகளில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பும் சாதகமாக அமைந்துவிடும்.

சென்னை அணி தொடக்க போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அவர்களுக்கு எஞ்சியுள்ள லக்னோ, சன்ரைசர்ஸ், குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 2ல் வெற்றி பெற்றாலே ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக மாறும். 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் செல்வது உறுதியாகும்.

சென்னையா? பஞ்சாப்பா?

பஞ்சாப் அணி இனி தாங்கள் ஆடும் 2 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். மே 17ம் தேதி அவர்கள் ஆர்சிபி அணியுடனும், மே 23ம் தேதி லக்னோ அணியுடனும் விளையாட உள்ளனர். இந்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்று 17 புள்ளிகள் பெற்றாக வேண்டும். அதேசமயம், சென்னை அணி தாங்கள் விளையாடும் மீதமுள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் கட்டாயம் தோற்றாக வேண்டும். 2 போட்டியில் தோற்றால் பஞ்சாப்பிற்கு வாய்ப்பு பிரகாசம் ஆகும்.

லக்னோ, மும்பை,  கொல்கத்தா, டெல்லி அணிகள் தொடரை விட்டு வெளியேறிய நிலையில் 4வது இடத்திற்கு மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது.

ராஜஸ்தானும் ஆர்வம்:

ராஜஸ்தான் அணி தங்களது எஞ்சிய 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக மாறும். ஆர்சிபி, குஜராத் அணிகளின் ப்ளே ஆஃப் இடங்கள் ஏறத்தாழ உறுதியாகியுள்ள நிலையில் சன்ரைசர்ஸ், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல கடும் போட்டியிடுகின்றனர். குறிப்பாக, ப்ளே ஆஃப் சுற்றுக்குச்செல்லப்போகும் 4வது அணி யார்? என்பதைத் தீர்மானிப்பதில் ரன்ரேட் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்.

Read Entire Article