IPL 2026: இளசு எல்லாம் வருது.. வருது.. பெருசு எல்லாம் கிளம்பு.. கிளம்பு! சிறுசுங்க கையில் இனி ஐபிஎல்!

6 months ago 5
ARTICLE AD

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆர்சிபி, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி ஐபிஎல் தொடரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்த தொடர் ஒவ்வொரு அணிகளுக்கும் பல விஷயங்களை கற்றுத் தந்துள்ளது.

அசர வைத்த இளம் வீரர்கள்:

இதுநாள் வரை ஐபிஎல் தொடர் அனுபவம் கலந்த சர்வதேச போட்டிகளில் ஆடிய இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் கையில் இருந்த நிலையில், இந்த தொடரில் ஏராளமான இந்திய அணிக்கு ஆடாத இளம் வீரர்களின் தாக்கம் இருந்தது. பல போட்டிகளில் ஆட்டத்தின் முடிவை அவர்கள் மாற்றிக் காட்டினர்.

ஆயுஷ் மாத்ரே, ஷைக் ரஷீத், வைபவ் சூர்யவன்ஷி, பிரியன்ஷ் ஆர்யா, சுயாஷ் சர்மா, திக்வேஷ் ரதி, விப்ராஜ், அசுதோஷ் சர்மா, விக்னேஷ் புத்தூர், நமன் தீர், ரகுவன்ஷி, நேகல் வதோரா, பிரப்சிம்ரன், அனிகெத் வர்மா, யஷ் தயாள் என இந்திய அணிக்காக ஆடாத வீரர்களின் ஆதிக்கம் அதிகளவு காணப்பட்டது.

மேலும், இந்திய அணிக்காக ஆடியிருந்தாலும் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இவர்களில் பெரும்பாலான வீரர்களின் வயது 25க்கும் குறைவாகவே உள்ளது.

சீனியர் வீரர்களுக்கு கல்தாவா?

இந்த தொடரின் பல போட்டிகளில் ஆட்டத்தின் போக்கையும், ஆட்டத்தில் தாக்கத்தையும் இளம் வீரர்களே ஏற்படுத்தியுள்ளனர். இதை ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் நன்றாக உணர்ந்துள்ளனர். உதாரணத்திற்கு சென்னை அணி இந்த தொடரில் பெரும்பாலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சென்னை அணி ஆயுஷ் மாத்ரே, ஷைக் ரஷீத், உர்வில் படேல் என இளைஞர்களை களமிறக்கிய பிறகு ஆடும் விதமே மாறியது.

இதேபோல, ஒவ்வொரு அணியிலும் அறிமுக இளம் வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கும் பட்சத்தில் இனி இவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு அணியிலும் தேவைப்படுகிறது. இதனால், அடுத்த சீசனில் ஒவ்வொரு அணியிலும் சீனியர் வீரர்கள் கழட்டிவிடப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக வழங்கப்படும் என்று கருதப்படுகிறது.

எதிர்கால ஐபிஎல்:

முழுக்க முழுக்க அவர்களிடம் அணியை ஒப்படைத்தால் அணி ஆட்டம் கண்டுவிடும் என்றாலும், முக்கியமான சீனியர் வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு இளமையான வீரர்களை நம்பி இனி வரும் காலங்களில் ஒவ்வொரு அணியினரும் களமிறங்கும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனென்றால், இந்த தொடரில் அவர்கள் ஆடிய விதமும், போராடும் குணமும் ரசிகர்களின் பாராட்டத்தையும் பெற்றது. சீனியர் வீரர்களிடம் இருந்தும், பயிற்சியாளர்களிடம் இருந்தும் இன்னும் அதிகளவு கற்றுக்கொண்டால் இவர்கள் மேலும் ஜொலிப்பார்கள் என்று கருதப்படுகிறது.

அடுத்த சீசனில் அஸ்வின் போன்ற பல சீனியர் வீரர்கள் பெஞ்சில் உட்காரவைக்கப்படுவார்கள் அல்லது அணியில் இருந்து கழட்டிவிடப்படுவார்கள் என்றே கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Read Entire Article