IPL 2026 RCB vs GT:- ஓ கேப்டன் மை கேப்டன்.. தோனி, ரோகித்தே செய்யாததை செய்த ரஜத் படிதார்!! வரலாறு நின்னு பேசும்!

4 days ago 2
ARTICLE AD

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19வது சீசன் நிறைவு பெற்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த தொடரில் கால்தடம் பதித்த ஆர்சிபி அணி இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ஆர்சிபி சாம்பியன்:

2024ம் ஆண்டு வரை ஒரு முறை கூட ஐபிஎல் பட்டம் பெற்றிராத அணி என்று பலராலும் ஏளனம் செய்யப்பட்ட ஆர்சிபி அணி கடந்தாண்டு முதன்முறையாக கோப்பையை வென்றது. இந்தாண்டும் இரண்டாவது முறையாக தொடர்ந்து கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

தோனி, ரோகித் செய்யாததை செய்த ரஜத் படிதார்:

19 ஆண்டுகளாக நடக்கும் ஐபிஎல் வரலாற்றிலே அடுத்தடுத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை இதற்கு முன்பு இரண்டே, இரண்டு அணிகள்தான் வென்றுள்ளன.  2010, 2011ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2019, 2020ம் ஆண்டுகளில்  மும்பை இந்தியன்ஸ் அணியும் பெற்றுள்ளன. தற்போது அந்த சாதனையை ஆர்சிபி சமன் செய்துள்ளது.

சென்னை அணிக்காக தோனியும், மும்பைக்காக ரோகித் சர்மாவும் அந்த வரலாறை படைத்துள்ளனர். ஆர்சிபி அணிக்காக ரஜத் படிதார் அந்த வரலாற்றைப் படைத்துள்ளார். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து பல வரலாற்றைப் படைத்துள்ள தோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை முறையாக பெறாத ரஜத் படிதார் செய்திருப்பது மிகப்பெரிய வரலாறு ஆகும். இதைவிட கேப்டனாக பொறுப்பேற்ற தனது முதல் 2 சீசன்களிலே ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் நபர் ரஜத் படிதார் மட்டுமே ஆவார். இந்த சாதனையை எந்தவொரு கேப்டனும் ஐபிஎல் தொடரில் படைத்ததே இல்லை.

ஆர்சிபி மட்டுமே:

மேலும், ஆர்சிபி அணியிடம் கோப்பையே இல்லை என்று ஏளனம் செய்த நிலையில், அடுத்தடுத்து ஐபிஎல் பட்டம் வென்ற மகளிர் அணி, அடுத்தடுத்து ஐபிஎல் பட்டம் வென்ற ஆண்கள் அணி ஆர்சிபி மட்டுமே என்ற சாதனையை படைத்துள்ளனர். ஆர்சிபி-யின் வெற்றியை அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிறந்த நாள் பரிசு:

ஐபிஎல் தொடர்களிலே அதிக ரசிகர்கள் கொண்ட அணிகளில் முக்கியமானது ஆர்சிபி. இதனால், உலகெங்கும் உள்ள அந்த அணியின் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாருக்கு இன்று பிறந்தநாள். இந்த பிறந்தநாளில் அவரது பிறந்த நாள் பரிசாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி குஜராத்தை தனது பந்துவீச்சால் கட்டுப்படுத்தியது.  புவனேஷ்வர், ரஷீக் சலார், ஹேசில்வுட், குருணல் பாண்ட்யா, ஜேக்கப் டஃபி சிறப்பாக வீசி 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

சேஸ் மாஸ்டர் கோலி:

156 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு வெங்கடேஷ் அதிரடி தொடக்கம் தர, படிக்கல் மற்றும் குருணல் சொற்ப ரன்களில் அவுட்டானாலும், படிதார் மற்றும் டிம் டேவிட் ஒத்துழைப்பு அளித்தனர். இவர்களை மறுமுனையில் வைத்துக் கொண்டு சேஸ் மாஸ்டர் கோலி தனி ஆளாக ஆட்டத்தை சிக்ஸர் அடித்து முடித்துக் கொடுத்தார். இதன்மூலம் ஆர்சிபி அணி தனது நடப்பு சாம்பியன் என்ற பட்டத்தை தக்கவைத்துள்ளது.

Read Entire Article