ஐபிஎல் தொடரின் 19வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று நடக்கும் 2வது போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் பவுலிங்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீசுவதாக தெரிவித்துள்ளார். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. சொந்த மண்ணில் ஆடுவது மும்பை அணிக்கு பலமாக காணப்படுகிறது.

சேசிங்கிற்கு மைதானம் ஒத்துழைக்கும் என்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது.