கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே பெரிய சறுக்கலை சந்தித்துள்ளது. அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா விலகியுள்ளார்.

கொல்கத்த நைட் ரைடர்ஸ்:

ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29 ஆம் தேதி தொடங்க உள்ளது, இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் இறங்கி உள்ளது. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் அவ்வளவு சுலபமானதாக இருக்க போவதில்லை. அந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்கியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிஉஅ தலைவலியாக உள்ளது.

ஹர்சித் ராணா விலகல்:

கடந்த மாதம் நடந்த டி20 உலகக் கோப்பை 2026 பயிற்சி ஆட்டத்தின் போது போது 22 வயதான வேகப்பந்து வீச்சாளரான ஹர்சித் ராணா காயத்தில் சிக்கினார். காயத்தில் இருந்து மீள முயற்சி செய்தாலும் அவர் தற்போது காயத்தில் இருந்து மீள்வது கடினம், என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு சீசனாக கொல்கத்தா அணியின் பந்துவீச்சின் முதுகெலும்பாக மாறினார் ஹர்சித் ராணா, அவர் 34 ஆட்டங்களில் 40 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் பிரைமரி பந்துவீச்சாளராக இருந்தார்.

இதுமட்டுமில்லாமல் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மதிஷா பதிரானாவும் உலகக்கோப்பையின் போது காயத்தில் சிக்கி தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். அவர் அணிக்கு எப்போது வருவார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

முசரபானியை ஒப்பந்தம் செய்த கேகேஆர்:

கே.கே.ஆர் ஜிம்பாப்வேயின் ஜாம்பவான் ப்ளெசிங் முசரபானியை அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ராணா நீக்கப்பட்டதாக அறிவிப்பு வந்துள்ளது. பு வந்துள்ளது. 6'8" உயரமுள்ள இந்த வேகப்பந்து வீச்சாளர் முதலில் பிஎஸ்எல் 2026 இல் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாட திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் ஐபிஎல்லுக்கு முன்னுரிமை அளிக்கத் தேர்வு செய்தார். முசரபானி ஆரம்பத்தில் முஸ்தபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாகக் கருதப்பட்டாலும், இப்போது ராணா இல்லாத நிலையில் அணிக்கு பலத்தை சேர்ப்பார் என எதிர்ப்பார்க்கலாம்.

ஹர்ஷித் ராணா விலகியுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி நிர்வாகம் வீரர்களைத் தேர்வு செய்வதில் பெரும் சவாலை எதிர்கொள்கிறது. அணியில் பல திறமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்கள் இருந்தாலும், சிலரது உடற்தகுதி குறித்த கவலைகள் நீடிக்கின்றன. தற்போது கேப்டன் அஜிங்க்யா ரஹானேவின் வசம் உள்ள வேகப்பந்து வீச்சு வீரர்கள் பின்வருமாறு:

மதீஷா பத்திரனா: "குட்டி மலிங்கா" என்று அழைக்கப்படும் இந்த இலங்கை வீரர், ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் (Death-overs) எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

வைபவ் அரோரா: புதிய பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவர், பெரும்பாலும் இன்னிங்ஸின் தொடக்கத்தில் பந்து வீசுகிறார்.

உம்ரான் மாலிக் மற்றும் ஆகாஷ் தீப்: அதிவேகமாக பந்து வீசும் உம்ரான் மாலிக் மற்றும் துல்லியமாக பந்து வீசும் ஆகாஷ் தீப் ஆகியோரின் மீது இப்போது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கார்த்திக் தியாகி: அதிக திறமை கொண்ட வேகப்பந்து வீச்சாளரான இவர், இந்த சீசனில் தனது முத்திரையைப் பதிக்கக் காத்திருக்கிறார்.

ஹர்ஷித் ராணாவிற்குப் பதிலாக புதிய வீரர் ஒருவரை ஒப்பந்தம் செய்வதா அல்லது தற்போதைய வீரர்களைக் கொண்டே விளையாடுவதா என்பதை KKR நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ராணாவைப் பொறுத்தவரை, ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணியின் சர்வதேச போட்டிகளுக்குத் தயாராகும் வகையில் தனது உடற்தகுதியை மீட்டெடுப்பதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.