IPL 2026 CSK vs RR: பவுலிங் ஃபயர்.. பேட்டிங் டாப் கியர்! சென்னையை அசால்டா ஜெயிச்ச ராஜஸ்தான் ராயல்ஸ்!

2 weeks ago 4
ARTICLE AD

ஐபிஎல் தொடரில் இன்று கவுகாத்தியில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணியை ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிதைத்தனர்.

128 ரன்கள் இலக்கு:

ருதுராஜ், சாம்சன், ஆயுஷ் மாத்ரே, ஷார்ட், ஷிவம் துபே என டாப் ஆர்டர்கள் சொதப்ப ஓவர்டன் தனி ஆளாக எடுத்த 43 ரன்கள் உதவியுடன் 128 ரன்களை இலக்காக ராஜஸ்தானுக்கு நியமித்தனர். 128 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்ஷி - ஜெய்ஸ்வால் ஆட்டத்தை தொடங்கினர். சூர்யவன்ஷி  இளங்கன்று பயமறியாது என்பதுபோல  மேட் ஹென்றி, கலீல் அகமது, கம்போஜ் என யார் வீசினாலும் அதிரடியாக ஆடினார்.

சூர்யவன்ஷி அதிரடி தாண்டவம்:

பவுண்டரியும், சிக்ஸரும் அவர் விளாசியதால் ராஜஸ்தான் வெற்றி மிகவும் எளிதாக மாறியது. அவர் 17 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 52 ரன்கள் எடுத்து அன்சுல் கம்போஜ் பந்தில் அவுடடானார். இதையடுத்து, ஜெய்ஸ்வால் - துருவ் ஜுரல் ஜோடி சேர்ந்தனர்.  8 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தனர்.

ஆட்டம் கையைவிட்டுப் போனாலும் சென்னை கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சாளர்களை மாறி, மாறி பயன்படுத்தினார். கம்போஜ் பந்தில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய துருவ் ஜுரல் 9 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அதன்பின்பு, ஜோடி சேர்ந்த கேப்டன் ரியான் பராக் - ஜெய்ஸ்வால் நிதானமாகவே ஆடினார்கள். மைதானம் இரண்டாம் பாதியில் சிறப்பாக பேட்டிங்கிற்கு ஒத்துழைத்ததால் அவர்கள் ரன் எடுக்க சிரமப்படவில்லை.

ராஜஸ்தான் வெற்றி:

பராக் - ஜெய்ஸ்வால் ஜோடி ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பி ராஜஸ்தான் வெற்றியை எளிதாக்கினார்கள்.  இலக்கு மிகவும் குறைவாக இருந்ததால் சென்னை அணி பந்துவீச்சாளர்களால் ராஜஸ்தானை கட்டுப்படுத்த இயலவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் ராஜஸ்தான் அணி இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரை தோல்வியுடன் தொடங்கியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 12.1 ஓவர்களில் ராஜஸ்தானை வெற்றி பெற வைத்த ஜெய்ஸ்வால் 36 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 38 ரன்களுடனும், ரியான் பராக் 14 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். ராஜஸ்தான் அணிக்காக ஆர்ச்சர் 4 ஓவர்களில் 19 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பர்ஜர் 2 விக்கெட்டும், ப்ரிஜேஷ் சர்மா, சந்தீப்சர்மா, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Read Entire Article