IPL 2026 CSK vs RR: தோனி இல்லாத சிஎஸ்கே முதலில் பேட்டிங்! ராஜநடை போடுமா ராஜஸ்தான்? ஜடேஜாவா? சாம்சனா?

2 weeks ago 4
ARTICLE AD

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இருவரும் மோதுகின்றனர்.

சிஎஸ்கே முதலில் பேட்டிங்:

பல்வேறு மாற்றங்களுடன் இரு அணிகளும் இந்த முறை களமிறங்குகின்றனர். சென்னை அணி முழுக்க முழுக்க இளம் பட்டாளத்துடன் களமிறங்குகிறது. அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இளைஞர்கள் பட்டாளத்துடன் களமிறங்குகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தோனி இல்லாத ஆட்டம்:

காயம் காரணமாக எம்.எஸ்.தோனி நீண்ட இடைவெளிக்கு பிறகு போட்டியைத் தவறவிவிடுகிறார். கவுகாத்தியில் நடந்து வரும் இந்த போட்டியில்  சென்னை அணிக்காக பேட்டிங்கில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், புதிய பலமாக இணைந்துள்ள சாம்சன், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே உள்ளனர்.

சாம்சன் - ஜடேஜா:

அதேபோல, ராஜஸ்தான் அணியும் பலமாகவே களமிறங்குகிறது. அந்த அணிக்கு பலமாக கேப்டன் ரியான் பராக் உள்ளனர். ஜெய்ஸ்வால், வைபவ் சூர்வயன்ஷி பேட்டிங்கில் அசத்த காத்துள்ளனர். இவர்களுடன் மிடில் ஆர்டரில் அசத்த ஹெட்மெயர் உள்ளனர். குறிப்பாக, சென்னை அணியின் தூணாகவும், முன்னாள் கேப்டனாகவும் பொறுப்பு வகித்த ஜடேஜா ராஜஸ்தான் அணியின் புதிய பலமாக இணைந்துள்ளார்.

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணியின் முன்னாள் கேப்டன்  ஜடேஜா தற்போது எதிரெதிர் அணியில் ஆடுவது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக கருதப்படுகிறது.

Read Entire Article