IPL 2025 SRH vs DC: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 10வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் ஆகிய அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் மிகப்பெரிய பேட்டிங் பட்டாளம் கொண்ட சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி மீண்டும் ரன் வேட்டை நடத்துமா? டெல்லி அணி அவர்களை கட்டுப்படுத்துமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இந்த போட்டி நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதரபாத் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருப்பதால் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.