IPL 2025 RR vs GT: சுளுக்கெடுத்த சுதர்சன்.. சோடை போன ராஜஸ்தான் பவுலிங்! 218 ரன்களை அடிப்பாங்களா?

8 months ago 7
ARTICLE AD

IPL 2025 RR vs GT: ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட் செய்தது.

குஜராத் மிரட்டல்:

ஆட்டத்தை தொடர்ந்த சுப்மன்கில் 2 ரன்னில் ஆர்ச்சர் பந்தில் போல்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு சுதர்சன் - பட்லர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் வீதம் குஜராத் ரன்ரேட் எகிறியது.

தொடர்ந்த அதிரடி காட்டிய சுதர்சன் அரைசதம் விளாசினார். அவருக்கு மறுமுனையில் பவுண்டரிகளாக அடித்து ஒத்துழைப்பு தந்த பட்லர் 25 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார்.  அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஷாருக்கானும் அதிரடி காட்டினார்.

சுதர்சன் மிரட்டல்:

சுதர்சனும் மறுமுனையில் அதிரடி காட்ட 150 ரன்களை மிக எளிதாக கடந்தது குஜராத். அதிரடி காட்டிய ஷாருக்கான் தீக்ஷனா பந்தில் ஸ்டம்பிங் ஆனார். அவர் 20 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரூதர்போர்டு அதிரடி காட்ட முயற்சித்த நிலையில் சந்தீப் சர்மா 7 ரன்களில் அவுட்டானார்.

கடைசி கட்டத்தில் சுதர்சன் அதிரடி காட்டினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுதர்சன் 53 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸருடன் 82 ரன்கள் எடுத்து துஷார் தேஷ்பாண்டே பந்தில் அவுட்டானார். ஆனாலும், ரஷீத்கான் அதிரடியால் 19வது ஓவரின் முடிவிலே குஜராத் அணி 200 ரன்களை எட்டியது. கடைசியில் குஜராத் அணி 20 ஓவர்களின் முடிவில் ராகுல் திவேதியா அதிரடியால் 217 ரன்களை எடுத்தது. ராகுல் திவேதியாக 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆர்ச்சர் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர் 4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 53 ரன்களும், தீக்ஷனா 4 ஓவர்களில் 54 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

Read Entire Article