IPL 2025 RCB vs RR: சின்னசாமியில் பெரியசாமி யார்? ராஜஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்குமா ஆர்சிபி?

7 months ago 5
ARTICLE AD

IPL 2025 RCB vs RR: ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பெங்களூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரைப் பொறுத்தவரை தற்போதைய புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதுகின்றன.

ஆர்சிபி முதலில் பேட்டிங்:

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த இரு அணிகளும் ஏற்கனவே ஜெய்ப்பூரில் மோதிய லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய போட்டி சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. ஆர்சிபி-யைப் பொறுத்தவரை இந்த தொடரில் வெளி மைதானத்தில் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இதுவரை வெற்றி பெற்ற நிலையில், சொந்த மைதானத்தில் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இதனால், இன்று நடக்கும் போட்டியில் வெற்றி பெற்று சொந்த மைதான சோகத்திற்கு முடிவு கட்டுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்சிபி மைதானமானது பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியாக கருதப்படுகிறது. இந்த மைதானத்தில் ஆர்சிபி இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் பேட்டிங்கில் தடுமாறியது. இதனால், இன்றைய போட்டியில் அந்த நிலையை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article