ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப்பெற்றதன் மூலம் தங்களது புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ் வெற்றி:

நடப்பு ஐபிஎல் தொடரில் 5 முறையான சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்ற நிலையில் கட்டாய வெற்றிக்காக நேற்றைய போட்டியில் களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸில் வெற்றிப்பெற்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய கொல்காத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது, மும்பை அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொல்த்தா அணி 116 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக மும்பை அணியின் அறிமுக பந்துவீச்சாளார் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். சுலபமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றிப்பெற்றுள்ளது. மும்பை அணியில் அதிகப்பட்சமாக ரிக்கல்டன் 62 ரன்களும், சூர்யக்குமார் யாதவ் அதிரடியாக 9 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

புள்ளிப்பட்டியல் - ஐபிஎல் 2025

அணிகள்

போட்டி

வெற்றி

தோல்வி

புள்ளிகள்

பெங்களூரு

2

2

0

4

டெல்லி

2

2

0

4

லக்னோ

2

1

1

2

குஜராத்

2

1

1

2

பஞ்சாப்

1

1

0

2

மும்பை

3

1

2

2

சென்னை

3

1

2

2

ஐதராபாத்

3

1

2

2

ராஜஸ்தான்

3

1

2

2

கொல்கத்தா

2

1

2

2

இன்றைய போட்டி LSG vs PBKS:

இன்று நடைப்பெறும் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.LSG அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்றுள்ளது. விசாகப்பட்டினத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, லக்னோவை அணி ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மறுப்புறம் அகமதாபாத்தில் நடந்த ஒரே போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்.

நேருக்கு நேர்

ஐபிஎல் வரலாற்றில் LSG மற்றும் PBKS அணிகள் நான்கு முறை மோதியுள்ளன. லக்னோ அணி மூன்று வெற்றிகளைப்பெற்றுள்ளது. பஞ்சாப் அணி இதுவரை ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஏகானா ஸ்டேடியத்தில் நடந்த இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன.

உத்தேச அணி:

பஞ்சாப் கிங்ஸ்: ஐடன் மார்க்ரன், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷாபாஸ் அகமது, திக்விஜய் ரதி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், ஆவேஷ் கான்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (சி), அஸ்மத்துல்லா ஓமர்சாய், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக்