<p><a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் இன்று சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. போட்டி நடக்கும் முல்லன்பூர் மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கபுரி என்பதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று கூறலாம். </p>
<p>இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப்பும், புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள கொல்கத்தாவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் ஏற்றம் பெற வாய்ப்பு உள்ளது. </p>