IPL 2025 MI vs SRH: பவுலிங்கில் மிரட்டிய பல்தான்ஸ்.. கடைசியில் கலக்கிய சன்ரைசர்ஸ்.. 163 ரன்கள்தான் டார்கெட்

8 months ago 9
ARTICLE AD

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பவுலிங் மிரட்டல்:

மும்பை வான்கடே மைதானம் சேசிங்கிற்கு உதவும் என்று கருதி ஹர்திக் பாண்ட்யா இந்த முடிவை எடுத்தார். இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடிக்கு மும்பை பந்துவீச்சாளர்கள் நெருக்கடி அளித்தனர். தீபக் சாஹர், போல்ட், பும்ரா கடும் நெருக்கடி அளித்தனர்.

இதனால் அவர்கள் பவர்ப்ளேவின் தொடக்கத்தில் ரன் எடுக்கத் தடுமாறினர். இருப்பினும், அபிஷேக் சர்மா பவுண்டரிகளாக விளாசினார். டிராவிஸ் ஹெட் மிகவும் தடுமாறினார். மும்பையின் ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில், அதிரடி காட்டிய அபிஷேக் சர்மாவை பாண்ட்யா அவுட்டாக்கினார். அவரது பந்தில் 28 பந்துகளில் 7 பவுண்டரியுடன் 40 ரன்களில் நடையை கட்டினார் அபிஷேக் சர்மா.

சரிந்த விக்கெட்டுகள்:

இதையடுத்து, களமிறங்கிய முன்னாள் மும்பை வீரர் இஷான் கிஷன் 2 ரன்னில் வில் ஜேக்ஸ் சுழலில் அவுட்டானார். அதன்பின்பு, பாண்ட்யா பந்தில் அவுட்டாகி நோ பால் என்பதால் வாய்ப்பு கிடைத்த டிராவிஸ் ஹெட் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்டார். அவர் 29 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாக, நிதிஷ் ரெட்டி - கிளாசென் ஜோடி சேர்ந்தனர்.

கியரைப் போட்ட கிளாசென்:

பும்ரா, போல்ட், ஜேக்ஸ், பாண்ட்யா மாறி, மாறி பந்துவீச்சு தாக்குதல் நடத்த இந்த ஜோடி ரன் எடுக்கத் தடுமாறியது. குறிப்பாக, சிக்ஸரே  வராமல் இருந்தது. அதிரடி காட்ட முயற்சித்த நிதிஷ் ரெட்டியை போல்ட் காலி செய்தார். அவரது பந்தில் 21 பந்தில் 19 ரன்களில் நிதிஷ் ரெட்டி அவுட்டானார்.  கடைசியாக 18வது ஓவரில்தான் சன்ரைசர்ஸ் அணி முதல் சிக்ஸரை விளாசியது.

தீபக் சாஹர் பந்தில் கிளாசென் சிக்ஸர் அடித்தார். பின்னர், அவர் அதிரடிக்கு மாறினார்.  தீபக் சாஹர் ஓவரில் 2 சிக்ஸர் 2 பவுண்டரி விளாசிய கிளாசெனை பும்ரா அடுத்த ஓவரில் போல்டாக்கினார்.

பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் வந்ததால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எட்டியது. அனிகெத் 8 பந்தில் 2 சிக்ஸருடன் 18 ரன்களுடனும், கம்மின்ஸ் 4 பந்தில் 1 சிக்ஸருடன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

தீபக் சாஹர் 4 ஓவர்களில் 29 ரன்களையும், வில் ஜேக்ஸ் 3 ஓவரில் 14 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். தீபக் சாஹர் 4 ஓவரில் 47 ரன்களையும், பாண்ட்யா 4 ஓவரில் 42 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். போல்ட், பும்ரா தலா 1 விக்கெட்டையும், வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Read Entire Article