ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

ரிக்கெல்டன் - ரோகித் அதிரடி அரைசதம்:

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணிக்கு ரிக்கெல்டன் - ரோகித் சர்மா நல்ல தொடக்கம் தந்தனர். ரிக்கெல்டன் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச ரோகித் சர்மா பவுண்டரிகளாக விளாசினார். இதனால், மும்பையின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் ஏறியது.

இந்த ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 100 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய இந்த ஜோடியை தீக்ஷனா பிரித்தார். ரிக்கெல்டன் 38 பந்துகளில் 7 பவுண்டரி 3 சிக்ஸருடன் 61 ரன்களுடன் அவுட்டானார். அபாரமாக ஆடிய ரோகித் சர்மா அரைசதம் விளாசினார். அடுத்து அதிரடிக்கு வந்த ரோகித் சர்மா 36 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

218 ரன்கள் டார்கெட்:

அடுத்து சூர்யகுமார் யாதவ் - கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி அபாரமாக ஆடியது. குறிப்பாக, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடினார். இதனால், மிக எளிதாக மும்பை 200 ரன்களை கடந்தது. கடைசியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை எடுத்தது. 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை மும்பை எடுத்ததால் ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 48 ரன்களுடனும், ஹர்திக் பாண்ட்யா 23 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 48 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணியில் பரூக்கி 4 ஓவர்களில் 54 ரன்களை வாரி வழங்கினார்.