ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் அணிகள் மோதும் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது.

அதிரடியாக தொடங்கிய கொல்கத்தா:

அந்த அணிக்காக குர்பாஸ் - சுனில் நரைன் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது. பவுண்டரிகளாக விளாசிய குர்பாஸ் ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். அவர் 12 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கேப்டன் ரஹானே பவுண்டரிகளாக விளாசினார்.

அவருக்கு ஒத்துழைப்பு தந்து அதிரடி காட்டிய சுனில் நரைனும் அதிரடி காட்டி அவுட்டானார். அவர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு வந்த ரகுவன்ஷி நிதானமாக ஆட மறுமுனையில் அதிரடி காட்டிய கேப்டன் ரஹானே அவுட்டானார். ஆனாலும் கொல்கத்தாவின் ரன் ரேட் 10க்கும் மேலே இருந்தது. ரஹானே 14 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு அவுட்டாக, இந்த தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னில் அவுட்டானார்.

கட்டுக்கோப்பாக வீசிய அக்ஷர் படேல்:

இதையடுத்து, ரகுவன்ஷி - ரிங்குசிங் ஜோடி சேர்ந்தது. இவர்கள் இருவரும் நிதானமாகவும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். இதனால், ரன்ரேட் 10க்கும் குறையாமலே சென்றது. ஸ்டார்க், சமீரா, விப்ராஜ் ஓவர்களில் ரன்களை கொல்கத்தா விளாச அக்ஷர் படேல் கட்டுக்கோப்பாக வீசினார்.

கடைசியில் ஜோடி சேர்ந்த ரஸல் - பவெல் ஜோடி அதிரடியாக ஆடியதால் கொல்கத்தா அணி 200 ரன்களை கடந்தது. அதிரடி காட்ட முயற்சித்த ரோவ்மென் பவெல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் அவுட்டானார். 4வது பந்தில் அங்குல் ராய் அவுட்டாக 5வது பந்தில் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ரஸல் ரன் அவுட்டானார். அவர் 9 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனால், டெல்லிக்க 204 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், விப்ராஜ் மற்றும் அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.