<p><a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஆட்டம் இன்று நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த சீசனின் 8வது போட்டியை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.</p>
<p>இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணிக்காக தோனியும், பெங்களூர் அணிக்காக கோலியும் களமிறங்குவதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ஜாம்பவான்கள் இருவரும் ஒரு வருடத்திற்கு பிறகு எதிரெதிராக ஆடும் போட்டி என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. </p>