IPL 2025 CSK vs RCB: இதுதான் த்ரில்! மரண அடி அடித்த மாத்ரே.. யஷ் தயாள் வேகத்தால் வென்ற ஆர்சிபி! கடைசி வரை ட்விஸ்ட்

7 months ago 9
ARTICLE AD

சென்னை அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். விராட் கோலி, ஜேக்கப் பெத்தேலின் அபார அரைசதத்துடனும், ஷெப்பர்ட் கடைசி கட்டத்தில் 14 பந்துகளில் அடித்த அரைசதத்தாலும் ஆர்சிபி 213 ரன்களை எட்டியது.

மிரட்டிய மாத்ரே:

இதையடுத்து, 214 ரன்கள் என்ற கடின இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இன்றைய போட்டியில் ஆர்சிபி அணி ஹேசில்வுட்டிற்கு பதிலாக நிகிடியுடன் களமிறங்கியது. ஆட்டத்தை ஆயுஷ் மாத்ரே - ஷைக் ரஷீத் தொடங்கினர். முதல் ஓவரில் குருணல் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த அடுத்த ஓவரில் இருந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.

குறிப்பாக, 17 வயது சிறுவன் ஆயுஷ் மாத்ரே அபாரமாக ஆடினார். அவர் பவுண்டரிகளாக விளாசினார். புவனேஷ்வர் வீசிய அவரது 2வது ஓவரில் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். இதனால், சென்னை அணியின் ரன்ரேட்டும் 10க்கு மேலேயே சென்றது. அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஷைக் ரஷீத் 14 ரன்களில் அவுட்டாக,  அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் நிகிடி பந்தில் அவுட்டானார்.

கலக்கிய ஜடேஜா:

இதன்பின்பு, மாத்ரே - ஜடேஜா ஜோடி சேர்ந்தது. ஜடேஜாவும் அதிரடி காட்ட மாத்ரேவும் அதிரடி காட்டினார். பாண்ட்யா, புவனேஷ்வர், யஷ் தயாள், நிகிடி, சுயாஷ் சர்மா, ஷெப்பர்ட் ஆகியோர் பந்துவீசியும் இந்த ஜோடியை அவ்வளவு எளிதாக பிரிக்க முடியவில்லை. மாத்ரே அரைதசம் கடந்த நிலையிலும் தனது ரன்வேட்டையைத் தொடர்ந்தார்.

அவருக்கு மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த ஜடேஜா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசியில் 30 பந்துகளில் 54 ரன்கள் என்ற நிலை வந்தது. மாத்ரே 93 ரன்னில் கொடுத்த கடினமான கேட்ச்சை கேப்டன் படிதார் தவறவிட்டார். அதே ஓவரில் ஜடேஜா அளித்த எளிதான கேட்ச்சையும் நிகிடி தவறவிட்டார்.

ஆட்டத்தை மாற்றிய நிகிடி:

ஆனால், அடுத்த ஓவரிலே ஆட்டத்தில் திருப்பு முனையை அவர் ஏற்படுத்தினார். அபாரமாக ஆடிக்கொண்டிருந்த ஆயுஷ் மாத்ரேவை அவர் அவுட்டாக்கினார். மாத்ரே 48 பந்துகளில் 9 பவுண்டரி 5 சிக்ஸருடன் 94 ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்த பந்திலே மிகவும் அபாயகரமான ப்ரெவிசை முதல் பந்திலே நிகிடி டக் அவுட்டாக்கினார்.

அப்போது தோனி களமிறங்கினார். ஆனாலும், மறுமுனையில் ஜடேஜா போராடினார். இதனால், கடைசி 18 பந்துகளில் 35 ரன்கள் சென்னை அணிக்குத் தேவைப்பட்டது. கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஜடேஜா அளித்த கேட்ச் வாய்ப்பை விராட் கோலி கோட்டை விட்டார். புவனேஷ்வர் ஓவரில் தோனி ஒரு சிக்ஸர் விளாசி ஆட்டத்தில் மேலும் பரபரப்பை கூட்டினார்.

கடைசி ஓவர் பரபரப்பு:

கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை யஷ் தயாள் வீசினார். முதல் பந்தில் தோனி 1 ரன் எடுக்க, 2வது பந்தில் ஜடேஜா 1 ரன் எடுத்தார். 3வது பந்தில் எல்பிடபுள்யூ ஆக கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. இம்பேக்ட் வீரராக வந்த துபே சிக்ஸர் விளாச, அந்த பந்து ப்ரி ஹிட்டானது. இதனால், 3 பந்துகளில் சென்னை வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.

அந்த பந்தில் 1 ரன் மட்டுமே துபே எடுக்க 2 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் ஜடேஜா 1 ரன் எடுக்க கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், ஆட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பந்தில் 2 ரன் மட்டுமே சென்னை எடுக்க ஆர்சிபி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதனால், இறுதிவரை விறுவிறுப்பான போன இந்த போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்குச் சென்றது.

Read Entire Article