Indias Neighbour Countries: சீனா, பாக்., மட்டும் தான் பிரச்னையா? 7 நாடுகளுடன் எல்லைகளை பகிரும் இந்தியா - உறவு எப்படி?

7 months ago 12
ARTICLE AD

Indias Border Sharing Country: எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுடன், இந்தியாவின் உறவு எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியாவும்.. அண்டை நாடுகளும்..

அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான, இந்தியாவின் உறவானது தொடர்ந்து சிக்கலானதாகவே நீடிக்கிறது. அண்மையில் பாகிஸ்தான் எல்லையில் இந்திய ராணுவம் நிகழ்த்திய ஆப்ரேஷன் சிந்தூர் கூட அதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். எந்தவொரு நாட்டின் எல்லையிலும் அமைதி நிலவ, அண்டை நாடுகளுடன் நல்ல நட்புறவு இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், நமது நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள இரண்டு நாடுகளுடனும், இந்தியாவின் உறவு மெச்சிக்கொள்ளும்படி இல்லை. அதேநேரம், பாகிஸ்தான் மற்றும் சீனா மட்டுமே, நமது நாட்டின் எல்லைகளை பகிரும் அண்டை நாடுகள் கிடையாது என்பது நீங்கள் அறிவீர்களா?

இந்திய எல்லைகளை பகிரும் 7 நாடுகள்:

இந்தியாவின் நில எல்லையை மொத்தமாக 7 நாடுகள் பகிர்ந்துகொள்கின்றன. இதில் அதிகபட்சமாக வங்கதேசமும், குறைந்தபட்சமாக ஆஃப்கானிஸ்தானும் இந்திய எல்லையை பகிர்ந்துகொள்கின்றன.

வங்கதேசம் - 4,096 கி.மீ.,

சீனா - 3,488 கி.மீ.,

பாகிஸ்தான் - 3,190 கி.மீ.,

நேபாளம் - 1,751 கி.மீ.,

மியான்மர் - 1,643 கி.மீ.,

பூடான் - 699 கி.மீ.,

ஆஃப்கானிஸ்தான் - 106 கி.மீ., (பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாக)

அண்டை நாடுகளுடன் இந்தியாவின் உறவு எப்படி?

1. வங்கதேசம்:

இந்தியாவிவுடன் நட்பு பாராட்டி வரும் சிறந்த அண்டை நாடாக வங்கதேசம் திகழ்ந்து வந்தது. ஆனால், ஷேக் ஹசினாவின் ஆட்சி கவிழ்ப்பிற்குப் பிறகு வங்கதேசம் மெல்ல மெல்ல சீனாவை நோக்கி நகர்ந்து வருகிறது. மேலும், மத அடிப்படையில் பாகிஸ்தான் உடன் நட்பு பாராட்ட அந்நாடு விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நாடு இந்தியாவின் அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

2. சீனா

ஆசிய கண்டத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற நோக்கில் இந்தியா மற்றும் சீனா இடையே பன்நெடுங்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் வெளிப்பாடாக அவ்வப்போது எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. இருநாட்டு தலைவர்கள் சந்திப்பும் என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது. இதனால் இந்தியா  சீனா இடையேயான உறவானது சிக்கல் மிகுந்ததாக திகழ்கிறது. இந்நாடு இந்தியாவின் லடாக், அருணாச்சலபிரதேசம், சிக்கிம், இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுடன் எல்லையை பகிர்கிறது.

3. பாகிஸ்தான்

இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று உருவான நாடு என்பதால், பாகிஸ்தான் உடன் வலுவான கலாச்சார பிணைப்பு உள்ளது. ஆனால், பிரிவு முதலே இருநாடுகளுக்கு இடையேயான உறவின் விரிசலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காரணம் காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பதிலிருந்து தொடங்கி, இந்தியாவிற்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமளிப்பது வரை நீள்கிறது. இந்நாடு இந்தியா உடன் பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களுடன் எல்லையை பகிர்கிறது.

4.நேபாளம்

இமயமலை தாழ்வாரத்தில் அமைந்துள்ள நாடான நேபாளம், கலாச்சாரம், மதம் மற்றும் வர்த்தக அடிப்படையில் இந்தியாவின் நேசநாடாக திகழ்கிறது. இந்நாடு இந்தியா உடன் உத்தராகண்ட், பீகார், சிக்கிம், மேற்குவங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் எல்லையை பகிர்கிறது.

5. மியான்மர்

தென்கிழக்கு அண்டை நாடான மியான்மர் அமைவிடம் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்கிறது. இந்தியாவுடன் அருணாச்சலபிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் எல்லையை பகிர்கிறது. பிராந்திய மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் இருநாடுகளும் சிறந்த நட்பு நாடுகளாக திகழ்கின்றன.

6. பூடான்:

இமயமலையை சார்ந்த அமைதியான மற்றும் சிறிய நாடான பூடான், இந்தியாவின் சிக்கிம், அருணாச்சலபிரதேசம், அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுடன் எல்லையை பகிர்கிறது. கலாச்சார உறவுகள், அரசியல் ரீதியான நம்பகத்தன்மை மற்றும் கூட்டு திட்டங்கள் மூலமாக இருநாடுகளும் நட்பு பாராட்டுகின்றன.

7. ஆஃப்கானிஸ்தான்:

சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிபு காஷ்மீர் வாயிலாக, கில்ஜித் - பலுசிஸ்தான் பகுதியில் இந்தியா உடன் ஆஃப்கானிஸ்தான் எல்லையை பகிர்கிறது. நில அமைவு காரணமாக சில சிக்கல்கள் இருந்தாலும், இருநாடுகளும் நல்ல முறையில் நட்பு பாராட்டுகின்றன. ஆஃப்கானிஸ்தானின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை இந்தியா முன்னெடுத்துள்ளது. உதாரணமாக, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கான சர்வதேச போட்டிகளுக்கு, இந்திய மைதானங்கள் ஒதுக்கப்படுவதை கூட குறிப்பிடலாம்.

Read Entire Article