மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்தியாவுக்கான முன்னாள் பாகிஸ்தான் உயர் ஆணையர் அப்துல் பாசித் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சைகளைப் வெளிப்படுத்தியுள்ளது. ஒருவேளை அமெரிக்கா எங்களை தாக்கும் பட்சத்தில், பாகிஸ்தான் இந்திய நகரங்களை குறிவைக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.

உலக அளவில் நடைபெற்று வரும் போர் பதற்றம் தொடர்பான உரையாடலின்போது அப்துல் பாசித் இந்த கருத்தை தெரிவித்தார். அதில், அமெரிக்கா பாகிஸ்தானை தாக்கினால், நாங்கள் இந்தியாவை தாக்க வேண்டியிருக்கும். பாகிஸ்தான் ஏவுகணைகள் வேண்டுமானால் அமெரிக்காவை அடையாமல் போகலாம். ஆனால் இந்தியாவில் உள்ள புது டெல்லி மற்றும் மும்பையை ஒருநொடி கூட யோசிக்காமல் தாக்குவோம். நாங்கள் இதை சும்மா விட மாட்டோம். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம் என அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

மேலும், இது ஒரு கற்பனை விஷயம் மட்டும் தான். அதுபோன்ற ஒரு மிக மோசமான சூழலை நாங்களும் சரி, இந்தியாவும் சரி விரும்புவது இல்லை. இப்படியான ஒரு தாக்குதல் சாத்தியமற்றது எனவும் கூறியுள்ளார். எனினும் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டத்தை கையில் எடுத்தது. அதன்மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் இருந்த பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது தான் அமைதி நிலை திரும்பி வருகிறது.

Former Pakistani High Commissioner to India Abdul Basit thinks if USA or any other country attacks Pakistan then Pakistan should attack India and we will see what happens after that.

Pakistan's existence is a threat to India. Everyone in Pakistan is a Jihadi. Anyone who doesn't… pic.twitter.com/5fmhhFx9S9

— Incognito (@Incognito_qfs) March 21, 2026

இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரு நாடுகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்துல் பாசித்தின் கருத்து கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் அப்துல் பாசித் இந்தியாவில் பாகிஸ்தானின் உயர்மட்ட தூதராகப் பணியாற்றினார். அப்போது ரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பதட்டமாக இருந்த காலக்கட்டமாகும். காபூல், கந்தஹார் மற்றும் பக்திகா போன்ற பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் குற்றம் சாட்டிய நிலையில் பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரி அப்துல் பாசித்தின் இந்த கடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தரப்பில் இருந்து எவ்வித எதிர்கருத்துகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.