IND vs SL: இலங்கைக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! கோலி, ரோகித் களமிறங்குவார்களா?

1 year ago 7
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணம் முடிந்த பிறகு இலங்கை கிரிக்கெட் அணி ஆடி வருகிறது. இந்த சுற்றுப்பயணம் முடிந்த பிறகு, இந்திய அணி இலங்கை கிரிக்கெட் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது.

இலங்கைக்கு செல்லும் இந்தியா:

இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இந்த மாதம் அதாவது ஜூலை 26ம் தேதி நடக்கிறது. இரண்டாவது டி20 ஜூலை 27ம் தேதி நடக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஜூலை 29ம் தேதி நடக்கிறது. டி20 போட்டிகள் அனைத்தும் பல்லகேலேவில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.

🚨 NEWS 🚨

Fixtures for the upcoming India tour of Sri Lanka announced! 📢#TeamIndia | #SLvIND pic.twitter.com/oBCZn0PlmK
— BCCI (@BCCI) July 11, 2024

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்குகிறது. இரண்டாவத ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 4ம் தேதி நடக்கிறது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 7ம் தேதி நடக்கிறது. இரு அணிகளும் மோதும் டி20 போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மோதும் ஒருநாள் போட்டிகள் மதியம் 2.30 மணிக்குத் தொடங்குகிறது.

கோலி, ரோகித் களமிறங்குவார்களா?

கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி செல்லும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இதனால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி. ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.

விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதால் அவர்கள் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுவார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அடுத்த உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணியை உருவாக்கும் விதத்தில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வருங்காலமாக கருதப்படும் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ரிங்குசிங், ரிஷப்பண்ட், அர்ஷ்தீப்சிங் உள்ளிட்ட வீரர்களுக்கு தங்களை இன்னும் பட்டைத் தீட்டிக் கொள்ள நல்ல வாய்ப்பாக இந்த தொடர் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Varun Chakravarthy: ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யானை..வேதனையின் உச்சத்திற்கே சென்ற கேகேஆர் வீரர்!

மேலும் படிக்க: Brian Lara: ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள்.. என்னுடைய சாதனையை முறியடிக்க இரண்டு இந்திய வீரர்களால்தான் முடியும்! மனம் திறந்த லாரா!

Read Entire Article