இந்தியா vs தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் 2025: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி கவுஹாத்தியில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வழக்கமான நேரத்தில் தொடங்கும். ஆனால் கவுஹாத்தியில் நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

TEST CRICKET BACK AT THE EDEN GARDENS. pic.twitter.com/qOCq4mODxP

— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2025

சீக்கிரம் உதிக்கும் சூரியன்:

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் வழக்கமாக காலை 9.30 மணிக்கு தொடங்கும். முதல் அமர்வு இரண்டு மணி நேரம் நீடிக்கும், அதைத் தொடர்ந்து 40 நிமிட மதிய உணவு இடைவேளையும், இரண்டாவது அமர்வு இரண்டு மணி நேரமும் நீடிக்கும். மூன்றாவது அமர்வு 20 நிமிட தேநீர் இடைவேளைக்குப் பிறகு தொடங்கும். இருப்பினும், இரண்டாவது டெஸ்டில் இது நடக்காது. இந்தியாவுக்கு ஒரே ஒரு டைம் சோன் மட்டுமே உள்ளது, மேலும் குவஹாத்தி நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ளது. அதனால்தான் இங்கு சூரியன் அதிகாலையில் சீக்கிரம் உதிக்கிறது தற்போது, சூரியன் அதிகாலை 5.30 மணிக்கு உதித்து மாலை 4.30 மணிக்கு மறைகிறது. அதனால் தான் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலை 9 மணிக்கு தொடங்கும். டாஸ் காலை 8.30 மணிக்கு போடப்படும்.

முதலில் டீ.. அப்புறம் தான் லஞ்ச்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு காலை 11 மணிக்கு தேநீர் இடைவேளை இருக்கும், 20 நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கும். மதியம் 1.20 மணிக்கு மதிய உணவு இடைவேளை இருக்கும். இந்த இடைவேளை 40 நிமிடங்கள் இருக்கும். பின்னர் ஆட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் தொடங்கி மாலை 4 மணி வரை தொடரும். திட்டமிடப்பட்ட ஓவர்கள் முடிக்கப்படாவிட்டால், அன்றைய ஆட்டத்தை அரை மணி நேரம் நீட்டிக்க முடியும்.

கவுகாத்தியில் முதல் டெஸ்ட்:

அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். இந்தியாவில் டெஸ்ட் போட்டியை நடத்தும் 30வது மைதானம் இதுவாகும். முதல் சர்வதேச போட்டி 2017 இல் இங்கு நடைபெற்றது. இதுவரை, மூன்று டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் இங்கு நடத்தப்பட்டுள்ளன.