IND vs PAK: பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு மோதும் இந்தியா - பாக்! துபாய் மைதானம் எப்படி?

3 months ago 4
ARTICLE AD

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீது மோதும் போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் இரு அணிகளும் இன்று இரவு துபாய் மைதானத்தில் நடக்கிறது. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடக்கும் நிலையில், இந்த மைதானம் எப்படி? என்பதை கீழே காணலாம்.

மைதானம் எப்படி?

இந்த மைதானத்தில் இதுவரை 112 டி20 போட்டிகள் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த அணி 52 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளது. சேசிங் செய்த அணிகள் 59 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்த அணியின் சராசரி ரன்கள் 139 ஆகும். இரண்டாவது பேட் செய்த அணியின் சராசரி 121 ஆகும்.

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக இந்தியா அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 212 ரன்கள் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 14.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 184 ரன்கள் வங்கதேசத்திற்கு எதிராக இலங்கை அணி சேஸ் செய்யப்பட்டுள்ளது.

ரோகித், கோலி, பாபர், ரிஸ்வான் இல்லை:

இந்த மைதானத்தில் ஐக்கிய அரபு அமீரக மகளிர் அணிக்கு எதிராக நமீபியாக மகளிர் அணி 98 ரன்களை வைத்து டிபண்ட் செய்ததே குறைந்தபட்ச இலக்கை தற்காத்தது ஆகும்.  இந்த மைதானத்தில் 25 ஆயிரம் பேர் வரை நேரில் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம்.

இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளும் இளம் பட்டாளத்தை கொண்டு விளையாடுகின்றனர். ரோகித் சர்மா, கோலி, பாபர் அசாம், முகமது ரிஸ்வான் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களுடன் இரு அணிகளும் களமிறங்குகின்றனர்.

இந்திய அணி:

கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, சுப்மன்கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், பும்ரா, வருண் சக்கரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, ரிங்குசிங், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷித் ராணா

பாகிஸ்தான் அணி:

சல்மான் அகா தலைமையில் முகமது ஹாரிஸ், சைம் அயூப், ஷாகிப்சாடா ஃபர்ஹான், பக்கர் ஜமான், ஹசன் நவாஸ், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரஃப், ஷாகின் அஃப்ரீடி, சூஃபியன் முஹிம், அப்ரர் அஹமது, ஹுசைன் தலாத், ஹசன் அலி, குஷ்தில் ஷா, ஹாரிஸ் ராஃப், முகமது வாசிம் ஜுனியர், சல்மான் மிர்சா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூத்த வீரர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் வீரர்களுடன் இந்த இரு அணிகளும் களமிறங்குகின்றனர். பகல்ஹாம் தாக்குதலுக்கு பிறகு இந்த போட்டி நடப்பதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்று பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என்று ஒரு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் பாய்காட் இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், சுப்மன்கில், பாண்ட்யா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். பாகிஸ்தான் அணியில் சல்மான் அகா, ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், பக்கர் ஜமான் அனுபவ வீரர்களாக உள்ளனர். இந்த போட்டி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

Read Entire Article