<p>இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 46 ரன்களுக்கு அவுட்டான நிலையில், நியூசிலாந்து அணி 402 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, நெருக்கடியான சூழலில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய சூழலில் ரோகித் சர்மா 52 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் எடுக்க சர்ப்ராஸ்கான் - ரிஷப்பண்ட் ஜோடி அபாரமாக ஆடி இந்திய அணியை வலுவான நிலையை நோக்கி அழைத்துச் சென்றது. </p>
<p>சிறப்பாக ஆடிய சர்பராஸ்கான் 150 ரன்களில் அவுட்டாக, ரிஷப்பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 99 ரன்களில் ரிஷப்பண்ட் நிற்க மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் ரிஷப்பண்ட் சதம் அடிப்பார் என்று ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், வில்லியம் ஓ ரோர்கி வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலே இன்சைட் எட்ஜ் ஆகி ரிஷப்பண்ட் போல்டானார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். </p>