இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட்:

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த ஆட்டத்தின் முதல் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 402 ரன்களை குவித்தது.இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சர்பராஸ் கானின் சதத்துடன் இந்திய அணி 462 ரன்களை எடுக்க, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. அதன்படி ஐந்தாம் நாள் ஆட்டமான இன்று அந்த இலக்கை எளிமையாக எட்டிய நியூசிலாந்து அணி தங்களது வெற்றி பதிவு செய்தது.

சர்பராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர்:

முன்னதாக இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி சார்பில் சர்ஃபராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அதிரடியாக விளையாடி ஓரளவிற்கு இந்திய அணியை மீட்டனர். அந்தவகையில் சுப்மன் கில் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியதால் அவருடைய இடத்தில் தான் சர்பராஸ் கான் விளையடினார்.

அதன்படி சிறப்பான ஆட்டத்தின் மூலம் அடுத்து டெஸ்ட் போட்டியிலும் சர்ஃபராஸ் கான் இடம் பிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டினாலும் அவருடைய பிட்னஸ் விசயத்தில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் தான், சர்ஃபராஸ் கான் ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக புதிய சமையல்காரர் ஒருவரை பணிக்கு அமர்த்தி உள்ளதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "இந்திய அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் சர்ஃபராஸ் கான் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதேபோல் ரிஷப் பண்ட் தரப்பில் சர்பராஸ் கானுக்கு உதவியாக ஒரு சமையல்காரர் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் சர்பராஸ் கானின் உணவு பழக்கங்களை கையாள்வார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்கு முன்பாக உடலமைப்பில் சிறந்த இடத்திற்கு வர வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

கிரிக்கெட்டில் ஃபிட்னஸ் முக்கியமானது என்பதை சர்ஃபராஸ் கானும் உணர்ந்திருக்கிறார். அதற்கான பயிற்சியில் அவர் தீவிரமாக உள்ளார். அதேபோல் அவரின் உடல் பருமனாக இருந்தாலும், அசால்ட்டாக 450 பந்துகளை விளையாடக் கூடியவர். ரஞ்சி டிராபியில் 2 முறை முச்சதம் விளாசி இருக்கிறார். அவரிடம் திறமை இருக்கிறது. எப்போதும் அவர் பெரிய சதங்களை விளாச வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்" என்று கூறியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.