இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு அவுட்டான நிலையில், இந்தியா முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு அவுட்டானது. 3வது நாளான இன்று நியூசிலாந்து அணி ஏற்கனவே 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது.

359 ரன்கள் டார்கெட்:

2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியை இந்திய வீரர்கள் தங்கள் சுழலால் கட்டுப்படுத்தினர். ப்ளண்டல் 40 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சான்ட்னர், சவுதி அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆனால், கிளென் ப்லிப்ஸ் அதிரடியாக ஆடினார். அவரது அதிரடியால் 250 ரன்களை கடந்தது. ஆனால் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

359 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது. ஆடுகளத்தில் ஏற்கனவே பந்துகள் நன்றாக சுழல்வதால் கடினமான இலக்குடன் களமிறங்கியுள்ள இந்திய அணிக்கு மேலும் சவாலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.