IND vs AUS Champions Trophy 2025 Semi Final: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் அரையிறுதி போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் சுழல் தாக்குதலில் டிராவிஸ் ஹெட், லபுஷேனே, இங்கிலிஷ் விக்கெட்டுகளை இழந்தது. தற்போது, மேக்ஸ்வெல் - அலெக்ஸ் கேரி ஜோடி ஆடி வருகின்றனர்.

ஜடேஜாவிடம் அம்பயர் சொன்னது என்ன?

இந்த மைதானத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல் மற்றும் ஜடேஜா சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.

பிரதான ஆல்ரவுண்டரான ஜடேஜா பந்துவீசும்போது தனது கையில் டேப் சுற்றியிருந்தார். அப்போது, நடுவர் அந்த துணியை அகற்றுமாறு அறிவுறுத்தினார். ஏனென்றால், அதனால் பந்து சேதம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறி அகற்ற கூறினார். இதையடுத்து, ஜடேஜா வெறும் கையில் பந்துவீசினார்.

Umpire told Ravindra Jadeja to remove the tape from his bowling hands. pic.twitter.com/Q8wQTeDygQ

— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 4, 2025

மிரட்டும் சுழல் கூட்டணி:

ஜடேஜா 8 ஓவர்களில் 1 ஓவரை மெய்டனாக வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த தொடரில் ஜடேஜா இந்திய அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக உள்ளார். அவர் பெரியளவு விக்கெட்டுகளை வீழ்த்தாவிட்டாலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி வருகிறார்.

இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜடேஜா சுழல் கூட்டணி இந்த தொடரில் முக்கிய அங்கமாகா மாறியுள்ளது. இந்த மைதானம் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் சுழற்பந்துவீச்சாளர்களை மாறி, மாறி வீசி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்த ஸ்மித் ஷமியின் பந்தில் 73 ரன்களில் போல்டானார். அதிரடி காட்ட முயற்சித்த மேக்ஸ்வெல் அக்ஷர் படேல் சுழலில் 7 ரன்களில் போல்டானார்.