Impact of ABP Nadu's news: ஏபிபிநாடு செய்தி எதிரொலி! ஆபத்துக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள் – அதிரடி சுத்தம்!

4 months ago 8
ARTICLE AD

தஞ்சாவூர்: ஏபிபிநாடு செய்தி எதிரொலியாக தஞ்சை – திருவையாறு பைபாஸ் சாலையில் 8-ம் நம்பர் கரம்பை மேம்பாலத்தில் புதர்போல் வளர்ந்து இருந்து முட்செடிகள் அகற்றப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி 2 கட்டமாக பைபாஸ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. தஞ்சை மேலவஸ்தாசாவடியில் இருந்து தொடங்கி மாதாக்கோட்டை, விளார், வழியாக புதுப்பட்டினம், பட்டுக்கோட்டை பிரிவு சாலை, மாரியம்மன்கோவில் சாலையில் உள்ள ரவுண்டானா, வெண்ணாறு பாலம், பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா, திருவையாறு பிரிவு சாலை, 8-ம் நம்பர் கரம்பை, பிள்ளையார்பட்டி ரவுண்டானா வழியாக மாவட்ட எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் நிறைவடையும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முதல் கட்டமாக மேலவஸ்தாசாவடியில் இருந்து பள்ளியக்ரஹாரம் ரவுண்டானா வரை ஒரு கட்டமாகவும், அங்கிருந்து தற்போது தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள திருச்சி சாலையில் இணைக்கும் வகையில் 2-வது கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருச்சியில் இருந்து தஞ்சையை கடந்து செல்பவர்கள் தஞ்சை மாநகருக்குள் வந்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்கும் வகையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பணிகளும் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் – திருவையாறு பைபாஸ் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பைக்குகள், கார், சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகள் என்று இந்த பைபாஸ் சாலை வழியாக திருவையாறு மற்றும் கும்பகோணத்திற்கு செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் வாகனப்போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த பைபாஸ் சாலையில் 8ம் நம்பர் கரம்பை பகுதியில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலம் பகுதியில் ஆங்காங்கே முட்செடிகள் ஆளுயரத்திற்கு வளர்ந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்தது. இரவு நேரத்தில் திருவையாறில் இருந்து தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு இடதுபுறம் ஒதுங்கினால் முட்செடிகள் இருப்பது தெரியால் உடல் முழுவதும் காயமடைந்து விபத்துக்குள்ளாகும் நிலை இருந்து வந்தது.

இந்த மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறையினர் சரியாக பராமரிக்காத காரணத்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே குப்பைகள் மற்றும் முள் செடிகளை அப்புறப்படுத்தி மேம்பாலத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஏபிபிநாடு விரிவான செய்தியை வெளியிட்டது. இதையடுத்து மேம்பாலம் பகுதியில் பல இடங்களில் வளர்ந்து இருந்த முட்செடிகள், காட்டுச் செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து தற்போது இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய முடிகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். மேலும் செய்தி வெளியிட்ட ஏபிபிநாடு நிர்வாகத்திற்கும்,. அதிகாரிகளுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பைபாஸ் சாலையில் உள்ள மேம்பாலம் என்பதால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பின்னால் வரும் கார், லாரி போன்ற பெரிய வாகனங்களுக்கு வழி விட ஒதுங்கும் போது இந்த முட்செடிகளால் காயமடைந்து வந்தனர். இதற்கு ஒரு தீர்வை ஏபிபிநாடு செய்தி வெளியிட்டு ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேம்பாலத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் முக்கியமான கோரிக்கையாகும் என்றனர்.

Read Entire Article