ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘இம்மார்ட்டல்’. ஃபேண்டஸி ஹாரர், மிஸ்டரி மற்றும் திரில்லர் அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள இப்படம், வழக்கமான பேய் படங்களில் இருந்து மாறுபட்ட கதைக்களத்தை முயற்சிக்கிறது. செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இம்மர்டல் படத்தின் விமர்சனம் இதோ

கதை

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பழங்குடி தம்பதிக்கு பிறக்கும் மர்மமான உயிரினத்துடன் கதை தொடங்குகிறது. நிகழ்காலத்தில், அச்சுக்கூடத்தில் வேலை செய்யும் மாகி (ஜிவி பிரகாஷ்) என்ற இளைஞர் குறைந்த வாடகையில் வீடு தேடி அலைகிறார். அப்போது சிந்து (கயடு லோஹர்) என்ற பெண் வசிக்கும் ஆடம்பரமான வீட்டில் குறைந்த தொகைக்கு தங்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே காதல் உருவாகும் சூழல் காணப்படுகிறது. ஆனால், அந்த வீட்டில் நடக்கும் விசித்திரமான சம்பவங்கள் மாகிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. சிந்துவின் உண்மையான பின்னணி என்ன, அந்த வீட்டில் இருந்து மாகி தப்பித்தாரா என்பதே படத்தின் மையப் பிரச்சினையாகிறது.

விமர்சனம்

படத்தின் முதல் பாதி மர்மத்தை உருவாக்கும் விதத்தில் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஒரே வீட்டை மையமாக வைத்து கதை நகர்த்தப்பட்டாலும், சிறிய குறிப்புகள் மற்றும் பதற்றமான தருணங்கள் ஆர்வத்தை தக்க வைக்கின்றன. வழக்கமான திடீர் பயமுறுத்தல்களை அதிகமாக நம்பாமல், இயல்பான சூழல்களில் இருந்து திகிலை உருவாக்கியிருப்பது படத்தின் பலம். ஆனால், முதல் பாதியில் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பை இரண்டாம் பாதி முழுமையாக தக்க வைக்கவில்லை. கதை ஒரே இடத்தில் நீளுவதால் சில காட்சிகள் தொய்வை ஏற்படுத்துகின்றன. இறுதிக்கட்ட சண்டையும் சற்று நீளமாக இருப்பது பொறுமையை சோதிக்கிறது

நடிப்பு

ஜி.வி. பிரகாஷ் பயத்தில் சிக்கிய சாதாரண இளைஞராக இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக குழப்பம் மற்றும் அச்சத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனம் பெறுகிறது. கயாடு லோஹர் படத்தின் முக்கிய ஈர்ப்பாக இருக்கிறார். மர்மமான சிந்துவாக அவரது தோற்றமும் உடல்மொழியும் கதையின் பதற்றத்தை அதிகரிக்கின்றன. சாம் சி.எஸ். பின்னணி இசையும், காட்சிகளுக்கேற்ற ஒலி வடிவமைப்பும் ஹாரர் அனுபவத்திற்கு துணைபுரிகின்றன.

மேலும், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறிப்பாக மர்ம உயிரினம் தொடர்பான காட்சிகளில் திருப்திகரமாக அமைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணனின் காட்சிப்பதிவு வீட்டுக்குள் உருவாகும் பதற்றத்தை வெளிப்படுத்த உதவுகிறது. எடிட்டர் ராஜேஷ் எம். படத்தின் வேகத்தை சீராக வைத்திருக்க முயன்றுள்ளார். அதே நேரத்தில், சிலநகைச்சுவைக்காட்சிகள்எதிர்பார்த்தஅளவுக்குபலனளிக்கவில்லை

சிந்துவின் கதாபாத்திரத்தைச் சுற்றியுள்ள மர்மம் முதல் பாதியில் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறது. ஆனால், அந்த மர்மத்திற்கான பின்னணி மற்றும் உயிரினத்தின் நோக்கம் போன்ற அம்சங்கள் முழுமையாக வலுவாக எழுதப்படவில்லை என்ற குறையும் உள்ளது. இருந்தாலும், வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவில் ஹாரர் வகையில் முயற்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், புதிய முயற்சியை விரும்பும் ஹாரர் ரசிகர்களுக்கு ‘இம்மார்ட்டல்’ ஒருமுறை பார்க்கக்கூடிய படமாக அமைந்துள்ளது.