Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?

3 weeks ago 2
ARTICLE AD

Hyundai Offer Oct 2026: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அக்டோபர் மாதத்தில் ஹுண்டாயின் அதிகபட்ச சலுகை க்ரேட்டா என் லைன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹுண்டாய் அக்டோபர் 2026 சலுகை

இந்தியாவில் விழாக்காலம் நெருங்கி வரும் சூழலில், கார் வாங்க விரும்பும் நபர்களை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி நிறுவனங்கள் அதிரடியான சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ஹுண்டாய் நிறுவனம் அக்டோபர் மாதத்தில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார் மாடல்களுக்கும் சலுகை மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதில் க்ராண்ட் ஐ10 நியோஸ், ஆரா, ஐ20, எக்ஸ்டெர், வென்யு, வெர்னா, க்ரேட்டா, க்ரேட்டா என் லைன், க்ரேட்டா எலெக்ட்ரிக் மற்றும் அல்கசார் ஆகிய மாடல்கள் ஆகும். இந்த தள்ளுபடியானது பணத்தள்ளுபடி, நவராத்திரி முன்பதிவு போனஸ், எக்ஸ்சேஞ்ச் அல்லது ஸ்க்ரேப்பேஜ் பலன், செலக்ட் போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட கார்ப்ரேட், அரசாங்க மற்றும் ஊரக பயனர்கள் சலுகைகள் ஆகியவை அடங்கும்.

ஹுண்டாய் க்ரேட்டாவிற்கு ரூ.1.25 லட்சம் சலுகை:

ஹுண்டாயின் அக்டோபர் மாத தள்ளுபடியில் அதிகபட்ச பலனானது க்ரேட்டா என் -லைன் மாடலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி, நவராத்திரி புக்கிங் போனஸாக ரூ.25 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் பலனாக 30 ஆயிரம், ஸ்க்ரேப்பேஜ் பலனாக 50 ஆயிரம், கூடுதல் அப்க்ரேட் ஆஃபராக 25 ஆயிரம் மற்றும் ஊரக பயனருக்கான தள்ளுபடியாக 5 ஆயிரம் ரூபாய் அடங்கும். வழக்கமான க்ரேட்டா வேரியண்ட்களில் E பெட்ரோலிற்கு ஒரு லட்ச ரூபாய் வரையிலும், iVT பெட்ரோல் ட்ரிம்மிற்கு ரூ.1.05 லட்சம் வரையிலும், மற்ற தகுதிவாய்ந்த பெட்ரோல் வேரியண்ட்களுக்கு ரூ.1.15 லட்சம் வரையிலும் பலன்களை பெற முடியும்.

பழைய வெர்னாவிற்கு ஜாக்பாட்..!

வெர்னாவின் பழைய iVT வேரியண்ட்களுக்கு ரூ.1.05 லட்சம் வரை சலுகைகள் வழங்ககப்பட்டுள்ளன. இதில் அதில் 35 ஆயிரம் ரூபாய் பணத்தள்ளுபடி, நவராத்திரி புக்கிங் போனஸாக ரூ.25 ஆயிரம், எக்ஸ்சேஞ்ச் பலனாக 15 ஆயிரம், ஸ்க்ரேப்பேஜ் பலனாக 20 ஆயிரம், கூடுதல் அப்க்ரேட் ஆஃபராக 25 ஆயிரம் ரூபாய் ஆகியவை அடங்கும். iVT அல்லாத வேரியண்ட்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் வரையிலும், புதிய வெர்னாவிற்கு 75 ஆயிரம் ரூபாய் வரையிலும் அக்டோபரில் சலுகை மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்: Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்

ஹுண்டாயின் மற்ற மாடல்களுக்கான சலுகை..!

அல்கசார் பெட்ரோல் - ரூ.90,000 வரை சலுகை

க்ராண்ட் ஐ10 நியோஸ் - ரூ.75 ஆயிரம் வரை சலுகை

ஹுண்டாய் ஐ20 - ரூ.65 ஆயிரம் வரை

ஹுண்டய் எக்ஸ்டெர் - ரூ.55 ஆயிரம் வரை

ஹுண்டாய் ஆரா - ரூ.40 ஆயிரம் வரை

ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக் - ரூ.65 ஆயிரம் வரை

இதுபோக 2025ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு நிலுவையில் உள்ள குறிப்பிட்ட மாடல்கள் மீது, அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 20 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாத சலுகையானது நகரம் மற்றும் கையிருப்பில் உள்ள வேரியண்ட்கள் அடிப்படையில் மாறுபடும்.

Read Entire Article