ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு பிறகு பல நிறுவனங்களின் கார்களின் விலை குறைப்பை அந்தந்த நிறுவனங்கள் குறைத்து வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனமும் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது.

குறைப்பு எவ்வளவு:

ஹூண்டாய் கார்களின் விலை குறைப்பு அந்த மாடல் மற்றும் பிரிவைப்பொறுத்து மாறுப்படும். ஹூண்டாய் நிறுவனத்தின் ப்ரீமியம் வகை காரான டக்சன் அதிகப்பட்சமாக 2.40 லட்சம் வரை குறையவுள்ளது. இதே போல் ஐ20, எக்ஸ்டர், ஆரா, நியோஸ் போன்ற டாப் கார்களின் விலையும் ரூ.73,000 இருந்து 1.23 லட்சம் வரை குறையவுள்ளது.

எந்த கார் எவ்வளவு குறைவு?

Nios - ரூ.73,808 வரை

Aura -ரூ 78,465 வரை

Exter - ரூ.89,209 வரை

i20 - ரூ 98,053 வரை

i20 N Line ரூ.1,08,116 வரை

Venue - ரூ1,23,659 வரை

Venue N Line - ரூ.1,19,390 வரை

Verna -ரூ 60,640 வரை

Creta - ரூ 72,145 வரை

Creta N Line- ரூ 71,762 வரை

Alcazar - ரூ 75,376 வரை

Tucson -ரூ2,40,303 வரை

ஹூண்டாய் நிர்வாக இயக்குநர்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. உன்சூ கிம் கூறுகையில், "பயணிகள் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய அரசு மேற்கொண்ட முற்போக்கான மற்றும் தொலைநோக்கு நடவடிக்கையை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். இந்தச் சீர்திருத்தம் வாகனத் துறைக்கு ஒரு ஊக்கமாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட இயக்கத்தை மிகவும் மலிவு விலையிலும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வலுவான படியாகும்.

விக்ஸித் பாரத் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்லும்போது. ஹூண்டாய் எங்கள் கார்கள் மற்றும் SUVகள் தொடர்ந்து மதிப்பு, புதுமை மற்றும் ஓட்டுதலின் மகிழ்ச்சியை வழங்குவதை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் வளர்ச்சி லட்சியங்களுடன் இணைவதற்கு உறுதிபூண்டுள்ளது."

வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விலை குறைப்பு

இந்த விலை குறைப்பு மூலம் புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி, ஹூண்டாய் பிராண்டை எதிர்பார்த்து காத்திருப்பவர்களும் பெரிதும் பயனடைவார்கள். குறிப்பாக, மிட்-சைஸ் எஸ்யூவி மற்றும் பிரீமியம் மாடல்களின் விலை குறைப்பு அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த முடிவு, அடுத்த சில மாதங்களில் வாகன விற்பனையை அதிகரிக்கவும், போட்டி சந்தையில் வலுவாக நிலைநிறுத்தவும் உதவும் என தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.