Hyundai Electric SUV: பஞ்சிற்கு சவால்.! ஹுண்டாயின் புதிய மின்சார எஸ்யுவி ரெடி - டிசைன், அம்சங்கள் - லாஞ்ச் எப்போ?

2 months ago 5
ARTICLE AD

Hyundai Electric SUV: ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய மின்சார எஸ்யுவி, டாடா பஞ்சிற்கு போட்டியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுண்டாயின் புதிய மின்சார எஸ்யுவி:

இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்காக சாலை பரிதோதனையை தொடங்கியுள்ள, ஹுண்டாயின் புதிய எஸ்யுவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. வெளிப்புறம் முற்றிலும் மூடி மறைக்கப்பட்ட நிலையில் வெளியான முந்தைய புகைப்படங்கள், இது இன்ஜின் எடிஷனா? அல்லது மின்சார மாடலா? என சந்தேகத்தை எழுப்பி இருந்தது. ஆனல, தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஹுண்டாய் சாலை பரிசோதனையில் ஈடுபடுத்தியுள்ள புதிய எஸ்யுவி, ஒரு மின்சார கார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. மேலும் இது இந்திய சந்தைக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் கிடைத்துள்ள அறிகுறிகள் உணர்த்துகின்றன. மும்பையில் சாலை பரிசோதனையின் இரண்டாவது நாளான நேற்று, எஸ்யுவின் முன்புற மற்றும் பக்கவாட்டு அமைப்புகள் புகைப்படங்களில் சிக்கியுள்ளன.

மின்சார கார் என்பதை உறுதிப்படுத்தும் முன்புற டிசைன்

புதிய புகைப்படங்களானது முன்புற பகுதியை தெளிவாக வெளிப்படுத்தி தேவையான அளவிலான தகவல்களை வழங்கியுள்ளது. அதன்படி, முன்புறமானது மூக்கின் மையப்பகுதியில் நான்கு புள்ளிகளை கொண்டுள்ளது. ஹுண்டாயின் பெரும்பாலான புதிய மாடல்களில் இந்த டச் பின்பற்றப்படுகிறது. இந்த நான்கு புள்ளிகளானது மார்ஸ் கோடில் H என்ற வார்த்தையை குறிக்கிறது. மற்றொரு மிக முக்கியமான விஷயம் காரின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளிலும் எரிபொருளை நிரப்புவதற்கான வசதி இடம்பெறவில்லை. இதன் மூலம் காரின் சார்ஜிங் போர்ட் முன்பகுதியில் கட்டமைக்கப்பட்டு இருக்கும் என வலுவான சந்தேகங்களை எழுப்புகின்றன. இதே கலாச்சாரத்தை தான் க்ரேட்டாவின் மின்சார எடிஷனிலும் ஹுண்டாய் பின்பற்றியதால், பரிசோதனையில் ஈடுபட்டுள்ள எஸ்யுவியும் மின்சார கார் தானோ என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.

ஹுண்டாயின் புதிய எஸ்யுவி டிசைன்

மின்சார கார் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, வாகனத்தின் முன் மற்றும் பின் பக்கத்தில் பிக்சலேடட் எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் இடம்பெற்றுள்ளன. ப்ராண்டானது சர்வதேச சந்தையில் தனது மின்சார மாடல்களில் இந்த பிக்சலேட் தீமை பின்பற்றுகிறது குறிப்பாக ஐயோனிக் சீரிஸில் வழங்குகிறது. அதன் இன்ஸ்டெர் மின்சார காரில் கூட இந்த நடைமுறை தொடர்ந்துள்ளது. விண்ட்ஷோல்டின் கோணம் கூட இன்ஸ்டெர் மின்சார மாடலை பிரதிபலிக்கிறது. அதன்படி, க்ளோஸ்ட்-ஆஃப் முன்புற ஸ்டைலிங், பிக்சலேடட் தீம் லைட்டிங் அம்சங்கள், எரிபொருள் நிரப்பும் வசதி இல்லாதது ஆகியவை சேர்ந்து ஹுண்டாயின் புதிய எஸ்யுவி இன்ஜின் எடிஷன் இல்லை என்றும், முற்றிலுமான புதிய மின்சார கார் என்றும் யூகிக்க வழிவகுக்கிறது.

ஹுண்டாயின் புதிய எஸ்யுவி - யாருக்கு போட்டி?

அளவீடுகள் மற்றும் வடிவமைப்புகள் அடிப்படையில், புதிய எஸ்யுவி ஆனது காம்பேக்ட் மற்றும் பாக்ஸி, நிமிர்ந்த முன்புற பகுதி, தட்டையான டெயில்கேட், குள்ளமான ஓவர்ஹாங்க்ஸை கொண்டுள்ளது. இவை கார் சப்-4 மீட்டருக்குள் அடங்கும் என்பதை உணர்த்துகிறது. அதன்படி, ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் வென்யுவிற்கு கீழே புதிய கார் நிலைநிறுத்தப்படலாம். அதேநேரம், ஹுண்டாய் மைக்ரோ எஸ்யுவி பிரிவில் எக்ஸ்டெரை நிலைநிறுத்தியுள்ளது. சப்-4 மீட்டர் பிரிவில் வென்யு வலுவான விற்பனையாளராக தொடர்கிறது. எனவே அந்த பிரிவில் புதிய எஸ்யுவியை களமிறக்காமல், மைக்ரோ எஸ்யுவி மின்சார கார் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் பஞ்சிற்கு போட்டியாக, சந்தைப்படுத்த ஹுண்டாய் பரிசீலிக்கலாம்.

இந்தியாவிற்கான மின்சார எஸ்யுவி?

வழக்கமாக ஹுண்டாயின் கார் மாடல்கள் முதலில் தென்கொரியாவில் தான் சாலை பரிசோதனையை தொடங்கும். ஆனால், இந்த எஸ்யுவியின் பரிசோதனை உள்ளூர் சாலைகளை தாண்டி வெளிநாடுகளில் எங்கும் இதுவரை கண்டறியப்படவில்லை. இதன் மூலம், இந்தியாவிற்காகவே ஹுண்டாய் நிறுவனம் பிரத்யேகமாக தயாரிக்கும் முதல் மின்சார வாகனமாக இந்த எஸ்யுவி சந்தைப்படுத்தப்படுமோ என்ற ஆச்சரியம் கலந்த கேல்வி எழுந்துள்ளது. மும்பையில் சாலை பரிசோதனை செய்யப்படுவதால், அங்கிருந்து மிக அருகில் அமைந்துள்ள நிறுவனத்தின் தலேகான் ஆலையில் புதிய கார் உற்பத்தி செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதனால், போட்டித்தன்மை மிக்க விலையில் இந்த கார் விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது. விரைவில் கார் வெளியீடு தொடர்பான தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article