ஹூண்டாய் க்ரேட்டா (Hyundai Creta) மிகவும் பிரபலமான எஸ்.யு.சி. கார். இதன் புதிய அப்டேட்டட் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரேட்டா கார் 2015-ல் முதன்முறையாக வெளியிடப்பட்டது. இதுவரை 1.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதா அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கிரெட்டா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எஸ்.யு.வி. ரக கார்களில் பெரும் வரவேற்பை பெற்றது. ஹுண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா மாடல் விற்பனை வளர்ச்சி அதிகரித்தது. மிட் சைஸ் SUV பிரிவில் க்ரெட்டா கார்கள் அதிகளவில் விற்பனையானது. கிரேட்டா அறிமுகம் செய்யப்பட்ட 8 ஆண்டுகளில் அதன் விற்பனை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதன் எலக்ட்ரிக் வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது. இரண்டாவது ஜென்ரேசன் மாடலில் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2015-ல் ஹூண்டாய் கிரெட்டாவின் விலை ரூ.8.59 லட்சம் தொடக்க விலையாக இருந்தது. 2020-ல் ரு.99 லட்சம் தொடக்க விலையில் 2-ஜென்ரேசன் வெளியாகை அதிகளவு விற்பனையானது. னோரமிக் சன்ரூஃப் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜினையும் அறிமுகப்படுத்தியது. இப்போது கிரேட்டா புதிய வேரியண்ட் உடன் சில அப்டேட்களையும் பெற்றுள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா புதிய அப்டேட்ஸ்:

ஹூண்டாய் புதிய கிரேட்டா கார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் கிரேட்டா பயனர்களுக்கு அதிகளவில் பயனளிக்கும் விதத்தில் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கிரெட்டா EX(O) மற்றும் SX Premium என மிட் ஸ்பெக் டிரம்ஸ், அதாவது சிறப்புகளுடன் அதிக விலை கொடுக்காமல் கிடைக்கும் கார்.. EX(O பிரிவில் EX மற்றும் S என்ற மாடல்களும், SX ப்ரீமியம் பிரிவில் SX Tech மற்றும் SX (O) டிரிம்களில் கிடைக்கிறது. EX (O) வேரியண்ட்டில் பனரோமிக் சன்ரூஃப், படிக்க வசதியாக LED லைட்ஸ், ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

Creta SX Premium:

Creta SX Premium மாடலில் நிறைய அப்டேட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூப்டு லெதர் சீட்ஸ், ப்ரண்ட் வென்டிலேட்டடு சீட்ஸ், 8-வே பவர்டு டிரைவர்ஸ் சீட்ஸ், 8-ஸ்பீக்கர் Bose ஆடியோ சிஸ்டம்ஸ் ஆகியவை கொடுத்துள்ளது. spec SX (O) மாடல் டாப் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கிறது. மழை பெய்யும்போது ஆட்டோமெட்டிக்காக வைபர் ஆன் அகும் விதத்தில் மழை சென்சர், ரியர் வயர்லஸ் சார்ஜர் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் ஸ்மாட் கீ (Smart Key) வசதியை S(O) மாடலில் அறிமுகம் செய்துள்ளது.