உலகின் புகழ்பெற்ற கார் நிறுவனம் ஹுண்டாய். இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தங்களது கார்களுக்கு மாதாந்திர தள்ளுபடி அறிவிப்பது போல, ஹுண்டாய் கார்களும் ஜுலை மாத தள்ளபடி அளித்துள்ளது.

தள்ளுபடி:

எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை கீழே காணலாம்.

1. Hyundai Creta - 95 ஆயிரம் ரூபாய்

2. Hyundai Verna - 95 ஆயிரம் ரூபாய்

3. Hyundai Creta Electric - ரூபாய் 85 ஆயிரம்

4. Hyundai Alcazar - ரூபாய் 75 ஆயிரம்

5. Hyundai Grand i10 Nios - ரூபாய் 70 ஆயிரம்

6. Hyundai Exter - ரூபாய் 45 ஆயிரம்

7. Hyundai i20 - ரூபாய் 45 ஆயிரம்

8. Hyundai Aura - ரூபாய் 30 ஆயிரம்

9. Hyundai Venue - ரூபாய் 5 ஆயிரம்

ஹுண்டாயின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

Hyundai Creta:

ஹுண்டாயின் மிகவும் புகழ்பெற்ற காரான இந்த Hyundai Creta காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 95 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 30 ஆயிரமும் அல்லது ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 50 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்கிரேட் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.91 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 19.91 லட்சம் ஆகும்.

Hyundai Verna:

இந்த காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 95 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரொக்கமாக ரூபாய் 50 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேபேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அல்லது எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்கிரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் தள்ளுபடியாகவும் ரூபாய் 10 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.99 லட்சமும், இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18.26 லட்சம் ஆகும்.

Hyundai Creta Electric:

இந்த Hyundai Creta Electric காரின் தொடக்க விலை ரூபாய் 18.03 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 24.40 லட்சம் ஆகும். இந்த காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 85 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடி மற்றும் அப்கிரேட் தள்ளுபடியாக தலா ரூபாய் 15 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai Alcazar:

இந்த Hyundai Alcazar காருக்கு 75 ஆயிரம் ரூபாய் இந்த மாதம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடி மற்றும் அப்கிரேட் தள்ளுபடி ரூபாய் 50 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரமும், எக்சேஞ்ச் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசல் வேரியண்ட்டிற்கு ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.51 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 21.10 லட்சம் ஆகும்.

Hyundai Grand i10 Nios:

ஹுண்டாயின் இந்த Hyundai Grand i10 Nios காருக்கு ஜுலை மாத தள்ளுபடியாக ரூபாய் 70 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 30 ஆயிரமும், அப்கிரேட் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 5 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரமும் அல்து ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடி ரூபாய் 20 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.06 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 8.04 லட்சம் ஆகும்.

Hyundai Exter:

ஹுண்டாயின் இந்த Hyundai Exter காருக்கு ரூபாய் 45 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 25 ஆயிரமும், ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரமும், எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 10 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்டிற்கும் இந்த தள்ளுபடி பொருந்தும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 5.81 லட்சம் ஆகும். டாப் வேரியண்ட் ரூபாய் 9.61 லட்சம் ஆகும்.

Hyundai i20:

ஹுண்டாய் நிறுவனத்தின் Hyundai i20 காருக்கு ஜுலை தள்ளுபடியாக ரூபாய் 45 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. எக்சேஞ்ச் ஆஃபராக ரூபாய் 15 ஆயிரம் அல்லது ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 5 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 6 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 10.39 லட்சம் ஆகும்.

Hyundai Aura:

இந்த Hyundai Aura காருக்கு ரூபாய் 30 ஆயிரம் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரமும், ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக ரூபாய் 5 ஆயிரமும் அல்லது கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 5 ஆயிரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6 லட்சம். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 8.60 லட்சம் ஆகும்.

Hyundai Venue:

ஹுண்டாய் வெனுயூ காருக்கு ரூபாய் 5 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 8 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 15.83 லட்சம் ஆகும். இதன் N Line வேரியண்ட் ரூபாய் 10.66 லட்சம் முதல் ரூபாய் 15.67 லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஒரே சார்ஜில் 468 கி.மீட்டர் மைலேஜ்.. 1.45 லட்சம் ரூபாய் தள்ளுபடி! பட்ஜெட் விலையில் Tata Punch EV கார்!