வார விடுமுறை- சிறப்பு பேருந்து இயக்கம்

விடுமுறை என்றாலே அனைத்து மக்களுக்கும் கொண்டாட்டம் தான். அந்த வகையில் வார இறுதி நாள் விடுமுறையையொட்டி உறவினர்கள் வீட்டிற்கும், நண்பர்களோடு வெளியூருக்கும் சுற்றுலா செல்ல விருப்பப்படுவார்கள். எனவே பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு வார இறுதியிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிறு விடுமுறையையொட்டி 03/07/2026 (வெள்ளிக்கிழமை) 04/07/2026 (சனிக்கிழமை) மற்றும் 05/07/2026 (ஞாயிறுக்கிழமை) மற்றும் வார விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை காரணமாக சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 03/07/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 410 பேருந்துகளும், 04/07/2026 (சனிக்கிழமை) 290 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 03/07/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 04/07/2026 சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 03/07/2026 மற்றும் 04/07/2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை முடிவடைந்து ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 445 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6608 பயணிகளும் சனிக்கிழமை 7721 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 3074 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.