மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 1 மணி முதல் 7 மணி வரை கனமழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மாநகரின் பல பகுதிகளும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக புறநகர் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காலை முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. கனமழையால் மும்பை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.