Heat wave school holiday : பள்ளிகள் திறப்பை ஒரு வாரத்திற்கு தள்ளிப்போடுங்க.! வெப்ப அலை வீசப்போகுது- வெளியான முக்கிய அறிக்கை

1 week ago 3
ARTICLE AD

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்

தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால் காலையில் இருந்து வெயில் கொளுத்தி வருவதால் வீட்டிற்குள் மக்கள் முடிங்கி கிடக்கும் நிலை நீடித்து வருகிறது. வரும் நாட்களிலும் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிவடைந்து தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கூறுகையில், வெயிலின் தாக்கம் தொடர்பாக அறிவியல் பூர்வமாக கருத்துகளை வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து கேட்கப்பட்டுள்ளது.

பள்ளி திறப்பை தள்ளி போடுங்க- ராமதாஸ்

எனவே வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து பள்ளி விடுமறை நாட்கள் நீட்டிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் என கூறியிருந்தார். அந்த வகையில் இன்றோ அல்லது நாளையோ பள்ளிகள் திறப்பு தொடர்பாக தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோடை விடுமுறை நிறைவடைந்ததைத் தொடர்ந்து வரும் ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில், மாணவர்களின் உடல்நலன் குறித்த அச்சம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மாணவர்கள் உடல் நிலை பாதிப்பு

குறிப்பாக தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக வெப்பத்தில் பள்ளிக்குச் செல்வதால் நீரிழப்பு, சோர்வு, வெப்பக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் கற்றல் திறனும் கவனச்சேர்மையும் குறையக்கூடும். எனவே மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வார காலத்திற்கு தள்ளிப் போட வேண்டும்.

மாணவர்கள் உடல் நலனே முக்கியம்

அதே நேரத்தில், பள்ளிகளில் போதிய குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் உடல்நல பாதுகாப்பே அரசின் முதன்மை பொறுப்பாகும் என்பதால், நிலவும் வெப்ப அலை சூழ்நிலையை தீவிரமாக பரிசீலித்து உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அந்த அறிக்கையில் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read Entire Article