Haryana Assembly Election 2024: ஹரியானா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான ஜே.பி.நட்டா வியாழக்கிழமை ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், அதில் அக்னிவீரர்களுக்கு அரசு வேலைகள், 24 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஹரியான தேர்தல் அறிக்கையில் பாஜக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.

லாடோ லக்ஷ்மி யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் மாதம் ₹2,100 வழங்கப்படும்

அவல் பாலிகா யோஜனா திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிக்கு செல்லும் ஒவ்வொரு மாணவருக்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகளில் இலவச டயாலிசிஸ்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒலிம்பிக் விளையாட்டு நர்சரி.

ஹர் கர் கிரிஹானி யோஜனா திட்டத்தின் கீழ் ₹500க்கு சிலிண்டர்.

ஒவ்வொரு அக்னி வீரருக்கு அரசு வேலை உத்தரவாதம்.

புதிய வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துதல்.

IMT கர்கோடாவின் வழியில் 10 தொழில் நகரங்களை நிர்மாணித்தல் மற்றும் ஒரு நகரத்திற்கு 50,000 உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்காக தொழில்முனைவோருக்கு சிறப்பு சலுகைகள்.

சிராயு-ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹10 லட்சம் வரை இலவச சிகிச்சை மற்றும் குடும்பத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை வசதி.

அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையில் (MSP) 24 பயிர்களை கொள்முதல் செய்தல்.

இரண்டு லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை உறுதி.

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தில் இருந்து ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு மற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஐந்து லட்சம் வீடுகள்.

சிறிய பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு (36 சமூகங்கள்) போதுமான பட்ஜெட்டில் தனி நல வாரியங்கள்.

DA மற்றும் ஓய்வூதியங்களை இணைக்கும் அறிவியல் சூத்திரத்தின் அடிப்படையில் அனைத்து சமூக மாத ஓய்வூதியங்களிலும் அதிகரிப்பு.

இந்தியாவில் உள்ள எந்த அரசு கல்லூரியிலும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிக்கும் ஹரியானாவைச் சேர்ந்த OBC மற்றும் SC சாதி மாணவர்களுக்கு முழு உதவித்தொகை.

ஹரியானா மாநில அரசு முத்ரா திட்டத்துடன் சேர்த்து அனைத்து OBC வகை தொழில் முனைவோருக்கு ₹25 லட்சம் வரை கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும்.

ஹரியானாவை உலகளாவிய கல்வியின் மையமாக மாற்றுவதன் மூலம் நவீன திறன்களில் பயிற்சி.

தெற்கு ஹரியானாவில் உள்ள சர்வதேச அளவிலான ஆரவல்லி ஜங்கிள் சஃபாரி பூங்கா