Harshit Rana: ’முதல் இந்திய கிரிக்கெட் வீரர்..’ ஹர்ஷித் ராணா வரலாற்று சாதனை! என்ன தெரியுமா?

10 months ago 7
ARTICLE AD

ஒருநாள், டெஸ்ட், டி-20 ஆகிய மூன்று ரக கிரிக்கெட்டில் முதல் போட்டியில் மூன்று விக்கெட்கள் (3+ wickets ) எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா படைத்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஹர்ஷித் ராணாவிற்கு 50 ஓவர் கிரிக்கெட்டில் முதல் போட்டி. முதல் போட்டியிலேயே சிறப்பான விளையாடி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.
2024, நவம்பர் மாதத்தில் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக இந்தியாவுக்காக களமிறங்கினார். டி-20 போட்டியில் ஜனவரியில் புனேயில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டி அறிமுகமானார். மூன்று ரக கிரிக்கெட்டிலும் 3+ விக்கெட் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

Wicket No. 3⃣ for Harshit Rana! 🙌 🙌

Liam Livingstone departs as England lose their 6⃣th wicket!

Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/287jFbQ4uc
— BCCI (@BCCI) February 6, 2025

நாக்பூரில் உள்ள Vidarbha Cricket Association விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தது. சிறப்பாக பந்து வீசிய ராணா, 3 விக்கெட்களை எடுத்தார். 53 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்ததார். இங்கிலாந்து 248 ரன் எடுத்ததற்கு ராணாவின் விக்கெட் முக்கியமானது. இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கட் (Ben Duckett (32)), ஹாரி ப்ரூக் (Harry Brook), அதிரடி பேட்ஸ்மென் லியம் லிவ்ங்ஸ்டோன் (Liam Livingstone (5)) ஆகிய மூவரின் விக்கெட்களையும் எடுத்தார்.

இந்திய அணி 38.4 ஓவரில் 251 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருது பெற்றார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்து சென்றனர். விக்கெட் வீழ்ந்தாலும் கில், அக்ஸார் படேல் இருவரின் பார்ட்னர்ஷிப் ஸ்கோரை உயர்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் போட்டியில் 3+ விக்கெட்

டெஸ்ட்கிரிக்கெட் - 3/48 Vs ஆஸ்திரேலியா பர்த்

டி-20 கிரிக்கெட் - 3/33 Vs இங்கிலாந்து புனே, இந்தியா

ஒருநாள் கிரிக்கெட் - 3/53 Vs இங்கிலாந்து - நாக்பூர் இந்தியா

பிப்ரவரி 19-ம் தேதி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடங்க இருக்கிறது. சாம்பியன்ஸ் ட்ராபி அணியில் ராணா இடம்பெறவில்லை. பும்ரா சாம்பியன்ஸ் ட்ராபியில் சில காரணங்களால் விளையாடாமல் இருந்தால் அவருக்கு பதிலாக ராணா அணியில் சேர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு ராணா இப்போது உள்ள போட்டிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அவர் சிறப்பான செயல்படுவார் என்பதை எதிர்பார்க்கலாம்.

”இன்றையப் போட்டியில் லென்த் சரியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் திட்டமிட்டேன். தொடக்கத்தில்  பேட்ஸ்மென்கள் அடித்தனர். இருந்தாலும், என் திட்டத்தில் இருந்து மாறவில்லை. அதற்கு பரிசும் எனக்குக் கிடைத்துள்ளது.” என ராணா தெரிவித்துள்ளார். 23-வயதான இளம்வீரர் பல சாதனைகளை படைக்க சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article