ஏமாற்றத்தில் முடிந்த இந்தியா - இலங்கை தொடர்:

இந்திய கிரிக்கெட் அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடியது. இதில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை வென்றது. ஆனால் ஒரு நாள் தொடரை மோசமாக இழந்தது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி.

அதே போல் இலங்கை இந்தியா விளையாடிய இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த தொடர் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்று அதிர்ச்சி அடைந்தது பிசிசிஐ. இச்சூழலில் தான் இலங்கை மற்றும் இந்தியா விளையாடிய தொடரில் ஒரு பந்தை கூட நான் பார்க்கவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஒரு பந்தை கூட பார்க்கவில்லை:

இது தொடர்பாக அவர் பேசுகையில்,"நான் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் நான் ஒரு பந்தை கூட பார்க்கவில்லை. ஏனென்றால் என் கவனம் அனைத்தும் ஒலிம்பிக் போட்டிகள் மீது தான் இருந்தது.ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது உங்களுடைய ஒட்டுமொத்த கவனமும் அதில் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இது உலகின் சிறந்த விளையாட்டுத் தொடராகும். சில சமயம் நாம் வெற்றி பெறலாம்.

VIDEO | "To be honest, I have not seen a single ball of cricket during the India versus Sri Lanka series because I was watching only the Olympics. It was one of those things. Sometimes you win, sometimes you lose it. It's sports after all. All cricketers go through these periods.… pic.twitter.com/Loqesp0uYH

— Press Trust of India (@PTI_News) August 12, 2024

சில சமயம் நாம் தோற்கலாம். விளையாட்டில் இது அனைத்துமே சகஜம் தான். அனைத்து கிரிக்கெட் வீரர்களுமே இப்படி ஒரு நிலையில் கடந்து சென்று ஆக வேண்டும். நீங்கள் சிறப்பாக விளையாடும் சில சமயம் உங்களால் வெற்றி பெற முடியாது" என்று ஹர்பஜன்சிங் கூறியுள்ளார்

மேலும் படிக்க: Watch Video: சத்தியம் கேட்ட மனு பார்க்கரின் தாய்! உறுதி கொடுத்த நீரஜ் - திருமணம் குறித்த அப்டேட்டா?

மேலும் படிக்க: Happy Birthday Shoaib Akhtar: பேட்ஸ்மேன்கள் கால் நடுங்கும்.. எக்ஸ்பிரஸ் வேகம் மிரள வைக்கும்.. சச்சினை அலறவிட்ட ஷோயப் அக்தர் பிறந்ததினம்!