Gyanesh Kumar: சிக்கலில் தலைமை தேர்தல் ஆணையர்..! பழைய வழக்கை தூசி தட்டிய கேரள அரசு - பிரச்னை என்ன?

3 weeks ago 3
ARTICLE AD

CEC Gyanesh Kumar:  தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமயாக குற்றம்சாட்டி வருகின்றன.

தலைமை தேர்தல் ஆணையர் - தூசி தட்டப்படும் வழக்கு:

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சக ஆணையர்களின் கருத்துகளை பரிசீலிக்காமல், சுயமாகவே பல்வேறு முக்கிய முடிவுகளை எடுப்பதாக சில தகவல்கள் வெளியாகின. அதனை குறிப்பிட்டு பாஜகவிற்கு ஆதரவாக தலைமை தேர்தல் ஆணையர் செயல்படுவதாகவும், உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில்,  மலேசியப் பொறியாளர் ஒருவரின் தற்கொலையுடன் தொடர்புடைய சாலைத் திட்டம் ஒன்றில் 2006ம் ஆண்டு நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான விசாரணையை கேரள அரசு மீண்டும் தொடங்கியுள்ளது. இது, தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மாநில பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்த பதவிக்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

குறிவைக்கப்படும் தலைமை தேர்தல் ஆணையர்?

உலக வங்கி நிதியுதவி பெறும் சாலை புனரமைப்புத் திட்டமான கேரள மாநிலப் போக்குவரத்துத் திட்டத்தில் ஞானேகுமாரின் பங்கு குறித்து விசாரணை கோரி வந்த புகாரை அடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா சனிக்கிழமையன்று ஊழல் தடுப்புத் துறைக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணையானது, திட்டப்பணியின் போது நடந்ததாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பணியுடன் தொடர்புடைய மலேசியப் பொறியாளர் லீ சீ பீனின் மரணம் தொடர்புடையதாக அமைய உள்ளது. இந்த விவகாரம் முன்னரே பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால் 2006-ல் அரசாங்கம் மாறிய பிறகு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் சென்னிதலா விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தல்கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஊழல் தடுப்புத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:திருமணமாகி எட்டே மாதங்கள்..! கணவனை போட்டு தள்ளி ஓடிய மனைவி - சிக்கியது எப்படி? முழு விவரம்

வழக்கு விவரம் என்ன?

சர்ச்சையில் சிக்கிய திட்டம் என்பது அங்கமாலிக்கும் திருவனந்தபுரத்திற்கும் இடையேயான எம்.சி. சாலையை புனரமைப்பதற்காக, 2006-ல் தொடங்கப்பட்ட ரூ.215 கோடி மதிப்பிலான உலக வங்கி நிதியுதவித் திட்டமாகும். இந்தத் திட்டம், ஒரு மலேசிய நிறுவனத்திற்கும் பகீரதா இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் இடையேயான கூட்டு முயற்சியான PATI-BEL-ஆல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் மலேசிய நிறுவனம் ஈடுபட்டிருந்தது. திட்டப் பொறியாளராகப் பணியாற்றி வந்த லீ சீ பீன், மலேசியா திரும்புவதற்கு முன்பு கட்டுமானப் பணிகளின் போது புகார்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரத்தில் இரண்டு தற்கொலைக் கடிதங்கள் மீட்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதங்களில் ஞானேஷ் குமார் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. திட்டத்திற்காக அரசு செலுத்த வேண்டிய பணத்தை விடுவிக்க லஞ்சம் கோருதல் மற்றும் ஊழலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பணம் செலுத்துவதில் தாமதம் ஆகியவை இந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

சட்டப்படி விசாரிக்க முடியுமா?

ஞானேஷ்குமார் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையராக வகிக்கும் பதவி, விசாரணைக்கு சட்டரீதியான தடையாக அமையுமா என்றும் அமைச்சரிடம் வினவப்பட்டது. அனைத்து சட்ட அம்சங்களும் ஆராயப்பட்டுவிட்டதாகவும், அத்தகைய தடை எதுவும் இல்லை என்றும் சென்னிதலா விளக்கமளித்துள்ளார்.  அதன்படி பேசுகையில், "இந்த விசாரணை ஞானேஷ்குமார் 2006-ஆம் ஆண்டு கேரளாவின் பொதுப்பணித்துறை செயலாளராகப் பணியாற்றியபோது நடந்த ஒரு சம்பவம் தொடர்பானது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்குரிய பாதுகாப்பு அவருக்குக் கிடைக்காது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Read Entire Article