Guava Beauty: 24 வயது இன்ஸ்டா பிரபலம் திடீர் மரணம்.. லிப்ஸ்டிக் சாப்பிட்டதால் உயிர்போனதா? - நடந்தது என்ன?

6 months ago 7
ARTICLE AD

இளைஞர்களை கவரும் வகையில் அழகு சாதன பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. தற்போது பெண்களை போன்று ஆண்களும் தங்களை அழகுப்படுத்தி கொள்ளவும், பொலிவான முகத்தை பெறவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீப காலமாக இன்ஸ்டா பிரபலங்கள் சொல்லும் பொருட்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற செயல்களில் இன்றைய தலைமுறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இவை சில நேரங்களில் சரியாக இருந்தாலும் எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வது இல்லை.

விநோத முயற்சி

யூடியூப் பிரபலங்களை காட்டிலும் இன்ஸ்டா தளத்தில் ஒரு சிலர் தங்களது பேச்சு அல்லது வித்தியாசமான அணுகுமுறையில் அதிவேக வளர்ச்சியை தொடுகின்றனர். இதை பிறர் கோமாளித்தனம் என்றாலும் அதைத்தான் பலரும் ரசித்து பார்க்கிறார்கள். இயற்கைக்கு எதிரானது என்ற புரிதல் இல்லாமல் செய்யும் செயல்களால் உயிரை மாய்க்கும் மோசமான சூழலையும் உருவாக்குகிறது. இளைஞர்களை கவரும் கவர்ச்சியும் ஆபத்தில் முடிகிறது. அதுபோன்று அன்றாட வாழ்வில் உபயோகப்படுத்தும் அழகுசாதன பொருட்களை இளம்பெண் ஒருவர் அதனை மருந்து போல் குடித்து அதன் சுவை எப்படி இருக்கிறது என்பதை குறிப்பிட்டு வீடியோவாக வெளியிடும் விநோத முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

குவா பியூட்டி

தைவானை சேர்ந்த MAKE -UP -MUKBANG என அறியப்படும் இவர் குவா ப்யூட்டி என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளார். இவர், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பிளஷ், லிப்ஸ்டிக் மற்றும் பிற அழகு சாதனை பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார். இவரை 12,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இவரது வீடியோ பார்க்கும் சிலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். ஆபத்து நிறைந்த ரசாயன பொருட்களை சாப்பிடுவதை பார்க்கும் சிறு குழந்தைகள் இதேபோன்று அவர்களும் செய்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல் என்றும் நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

24 வயதில் மரணம்

இந்நிலையில், திடீர் உடல்நலக் குறைவால் குவா ப்யூட்டி மரணம் அடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். கடந்த மே மாதம் 24ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரசாயனம் நிறைந்த அழகுசாதன பொருட்களை சாப்பிட்டதால் நோய் தீவிரத்தால் உயிரிழந்துவிட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவில்லை. சமீபத்தில் இன்ஸ்டா பிரபலம் ஒருவர் லைவ்வில் இருக்கும்போதே மரணமடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article