GST: இன்று புது ஜிஎஸ்டி வரி விதிப்பு சதவீதம் அறிவிப்பு.. தாறுமாறாக குறையப்போகும் விலைவாசி..!

3 months ago 4
ARTICLE AD

நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜிஎஸ்டி வரி மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், ஜிஎஸ்டி வரியை எளிதாக வரையறுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது.

இன்று அறிவிப்பு:

தற்போது, 5, 12, 18, 28 சதவீதமாக உள்ள ஜிஎஸ்டி வரி 5 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 40 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. இதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார். இதற்கான பணிகளை ஏற்கனவே மத்திய அரசு தொடங்கிவிட்டது.

சென்னையில் நேற்று தொழில் முனைவோர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஜிஎஸ்டி அமலுக்கு வந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
40 சதவீத வரி:

அனைத்து தரப்பினருக்கும், அனைத்து பிரச்சினைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் புதியதாக ஜிஎஸ்டி வரி விதிப்பு அமைக்கப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மாலையே ஜிஎஸ்டி வரியில் மாற்றம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. வரி குறைப்பில் இது வரலாற்று புரட்சி.

28 சதவீத வரியில் இருக்கும் 12 பொருட்கள் 40 சதவீத வரிக்குள் கொண்டு வரப்படும். 28 சதவீத வரியுடன் 88 சதவீத வரி இருந்தது. இப்போது 40 சதவீதத்திற்குள் வரி வருகிறது.  இதற்கான அறிவிப்பு நாளை ( இன்று) வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

12 சதவீத வரி நீக்கம்:

இதன்படி இன்று வரி மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், 12 சதவீத வரி முற்றிலும் நீக்கப்படுகிறது. இந்த 12 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் இருக்கும் 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்குள் வர உள்ளது.

வீடுகளில் அத்தியாவசிய பொருட்களாக மாறியுள்ள ப்ரிட்ஜ் உள்ள வீட்டு உபயோக பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைய உள்ளது. இதனால், பல அத்தியாவசிய மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைய உள்ளது. ஏராளமான உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 0 சதவீதத்திற்கு கீழ் வர உள்ளது. இதனால், உணவுப் பொருட்களின் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 பொருட்கள்:

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக பல பொருட்களின் விலை அபரிமிதமாக உயர்ந்தது. இந்த சூழலில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்றும், அதில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசு இதில் சீர்த்திருத்தம் செய்ய உள்ளது. ஆனால், 40 சதவீதம் வரியின் கீழ் 12 பொருட்கள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதால் அதன் கீழ் என்னென்ன பொருட்கள் வரும்? என்ற வேதனையிலும் மக்கள் உள்ளனர்.

Read Entire Article