Good Bad Ugly: நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன்தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ஜாக்கி ஷெராஃப், சிம்ரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா:

இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்தில் நடித்துள்ள பிரியா வாரியருக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தின் ஒரு காட்சியில் சிம்ரனின் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா படத்திற்கு நடிகை ப்ரியா வாரியர் அர்ஜுன் தாஸுடன் ஆட்டம் போட்டிருப்பார். தமிழ் ரசிகர்கள் பலருக்கும் ஆல்டைம் ஃபேவரைட் பாடல் தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா பாடல் ஆகும்.

சிம்ரன் நடித்த அந்த பாடலில் சிம்ரன் அணிந்த அதே உடையுடன் பிரயா வாரியர் ஆடுவார். அவரது நடனம் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், குட் பேட் அக்லி படம் வெளியான பிறகு இணையத்தில் இவரது நடனம் வைரலாகி வருகிறது.

மீண்டும் வைரல்:

ஒரு அடர் லவ் படத்தில் இடம்பிடித்த கண்ணடிக்கும் காட்சி மூலமாக ப்ரியா வாரியர் ஏற்கனவே இந்தியா முழுவதும் பிரபலம் ஆனார். தானாக என்ற மலையாள படம் மூலமாக அறிமுகமான அவர் ஒரு அடர் லவ் படத்தில் நாயகியாக திரையுலகில் கால்தடம் பதித்தார். பின்னர், தெலுங்கு, இந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலமாக தமிழில் அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு இவர் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீசாகியது. இந்த படத்தில் குறைந்த நேரமே வந்தாலும் தனது நடனம் மூலமாக ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்துள்ளார் பிரியா வாரியர். இதுபோல தன்னுடைய நளினத்தாலும், நடனத்தாலும் ரசிகர்களிடம் பிரபலம் ஆகி வரும் பிரியா வாரியருக்கு தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது. ப்ரியா வாரியர் குட் பேட் அக்லி படத்தில் சிறிது நேரம் வந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.