<p>தமிழ்நாட்டில் கடந்த பல வாரங்களாகவே தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாடகளாகவே தங்கம் உயர்ந்தும், இறங்கியும் வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்று கொட்டும் மழையில் ஆபரணத் தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 1080 குறைந்துள்ளது. ரூபாய் 56 ஆயிரத்து 680க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 7 ஆயிரத்து 85க்கு விற்கப்பட்டு வருகிறது. </p>