GOLD Pirce: பாமர மக்கள் ஷாக், ராக்கெட் வேகத்தில் எகிறப்போகும் தங்கம் விலை, அமெரிக்கா போட்ட குண்டு..!

1 year ago 7
ARTICLE AD

GOLD Pirce: அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தன் விளைவாக தங்கம் விலை, உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

வட்டியை குறைத்த ஃபெடரல் வங்கி:

கடந்த நான்கு ஆண்டுகளில் முதல்முறையாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதன் பெஞ்ச்மார்க் வட்டி விகிதத்தை குறைத்தது. இந்த நடவடிக்கையை கணிசமான 50 அடிப்படை புள்ளி குறைப்புடன் தொடங்கியது. ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி, மார்ச் 2022 இல் உயர்த்தத் தொடங்கிய  வட்டி விகிதத்தை, ஜூலை 2023 முதல் எந்த விதமான மாற்றத்தையும் செய்யாமல் தக்கவைத்து இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த வட்ட் விகிதங்கள் குறைக்கப்படுள்ளன. இதுதொடர்பாக பேசிய ஃபெடரல் வங்கித் தலைவர் ஜெரோம் பவல், ”அமெரிக்கப் பொருளாதாரம் சமநிலைக்கு வந்துள்ளது. அதாவது வட்டி விகிதங்களைக் குறைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை:

வட்டி விகித குறைப்பு அறிவிப்பு வெளியானதுமே, அமெரிக்க சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கத்தின் விலை 0.9 சதவிகிதம் அதிகரித்து 2,592.39 டாலர் என விற்பனை செய்யப்பட்டது. குறைந்த வட்டி விகிதங்கள் லாபத்தை தராத தங்கத்தை வைத்திருப்பதற்கான வாய்ப்பை டாலர் அடிப்படையில் குறைத்தது. மற்ற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் மலிவானது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இதேபோன்று வெள்ளியின் விலையும் 0.6 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது.

இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் எகிரப்போகும் தங்கம் விலை?

டாலர் தவிர்த்த மற்ற நாணயங்களை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் மலிவானது என்பதால், இந்தியாவில் இன்று தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கலாம். அதாவது கொள்முதல் அதிகரிக்கலாம். இதன் விளைவாக, தேவை அதிகரிக்க உள்ளதால், இந்தியாவில் இன்று தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இதுவரை இல்லாத புதிய உச்சத்த தங்கம் இன்று எட்டக்கூடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் தற்போது ஆபரண தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாயாகவும், ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 800 ரூபாயாகவும் உள்ளது. அதேநேரம், 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 7 ஆயிரத்து 305 ரூபாயாகவும், ஒரு சவரன் 58 ஆயிரத்து 440 ரூபாயாகவும் உள்ளது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுவது, எளிய பாமர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Entire Article