தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை 34 ஆயிரம் என்ற உயரத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

ஜூன் 29-ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை.

ஜூன் 30 - ஆம் தேதி காலையில் கிராமுக்கு 270 ரூபாய் குறைந்து 13,030 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,160 ரூபாய் குறைந்து 1,04,240 ரூபாய்க்கும் விற்பனை. மாலையில் கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம், 13,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,360 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,05,600 ரூபாய்க்கும் விற்பனை .

ஜூன் 1 ஆம் தேதி தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனையானது. மாலையில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு 1200 ரூபாய் உயர்ந்து 1,06,000 ரூபாய்க்கு விற்பனையானது

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது நேற்று காலையில் குறைந்தும், மாலையில் அதிகரித்தும் நகைப்பிரியர்களை ஷாக் அடைய வைத்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் உயர்ந்து 13,400 ரூபாய்க்கும், சவரனுக்கு 1200 ரூபாய் அதிகரித்து 1,07,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையானது இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.