கங்குவா

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் காணொளி மூலம் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கங்குவா படம் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு அனுபவமாக இருக்கும் என்று இப்படம் நிச்சயம் பான் இந்திய அளவில் சாதனை படைக்கும் என்று அனைவரும் நம்பி வருகிறார்கள். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா படம் 2000 கோடி வசூல் அடிக்கும் என நம்பிக்கையாக தெரிவித்துள்ளார். இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை நிகழ்ச்சி முடிவில் அறிவித்தார் ஞானவேல் ராஜா.

கங்குவா வெற்றி விழா பற்றி ஞானவேல் ராஜா

" கங்குவா ஆடியோ லாஞ்சிற்கு வந்த ரசிகர்கள் இந்த பாஸை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இதே பாஸுடன் கங்குவா வெற்றி விழாவில் நீங்கள் கலந்துகொள்ளலாம். டிசம்பர் மாதம் பான் இந்திய சாதனையுடன் உலகத்தில் உள்ள அத்தனை விநியோகஸ்தர்கள் மத்தியில் கங்குவா படத்தின் வெற்றி விழா நடக்கும். தேதியை நான் அறிவிப்பேன். " என ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பாகவே வெற்றிவிழா பற்றி அறிவித்துள்ள ஞானவேல்ராஜாவின் நம்பிக்கையை அனைவரும் வியந்து பார்த்தாலும் இன்னும் சில ஓவர் கான்ஃபிடண்டா இருக்காறோ என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்கள்.

I Need This confidence in my Life😭🔥
pic.twitter.com/UVUJk3pCVh

— Saloon Kada Shanmugam (@saloon_kada) October 26, 2024

வரும் நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.