Gandhi Temple : கம்பம் அருகே மகாத்மா காந்திக்கென உள்ள கோயிலில் இன்று சிறப்பு வழிபாடு

1 year ago 7
ARTICLE AD

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் கடந்த 29 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட காந்தி கோயிலில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் அகிம்சை முறையில் போராடி சுதந்திரம் பெற்றுத் தந்த, இந்திய நாட்டின் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு உலகின் பல இடங்களில் நினைவு மண்டபங்களும், சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்னர் காந்திஜிக்கு கோயில் கட்டிய பெருமை தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமயகவுண்டன்பட்டியை சேரும்.

PM Modi - Rajinikanth: ரஜினிகாந்த் உடல்நிலை.. ஃபோன் போட்டு விசாரித்த பிரதமர் மோடி.. என்ன சொன்னார்?

குறிப்பாக காந்தி ஜெயந்தியை விழாவாக  இவ்வூர் மக்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. சுதந்திர போராட்ட களத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான இந்திய தேசியப் படையில் இருந்த சோமநாதன் சின்னியகவுடர், வெங்கடாசல செட்டியார், நாராயண பண்டிதர் உள்ளிட்ட சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற காந்தியவாதிகள் நூற்றுக்கணக்காணவர்களைக் கொண்ட ஊர் காமயகவுண்டன்பட்டி.அதேபோல சுதந்திரத்துக்கு பாடுபட்ட முன்னாள் எம்.பி., கே. சக்திவேல் கவுடர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.கே. பாண்டியராஜ், பரமசிவத் தேவர், கிருஷ்ணசாமி, சுருளியாண்டி ஆசாரி, தொட்டப்பனு, வீராச்சாமி நாயுடு போன்றோரும் காமயகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்

காந்திஜியின் மறைவுக்கு பின்பு அவரது அஸ்தி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள புனித நதிகளிலும் புண்ணிய ஸ்தலங்களில் கரைக்கப்பட்டபோது, அஸ்தியின் ஒரு பகுதி காமயகவுண்டன்பட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர், இந்தக் கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சக்திவடிவேல் கவுடர், என்.கே. ராமராஜ், என்.கே. பாண்டியராஜ் ஆகியோர் சேர்ந்து, காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த கம்பம் சாலையில், பொதுமக்கள் வழிபடும் வகையில் மகாத்மா காந்திக்கு கோயில் எழுப்பினர்.

Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!

Isha: நீதிமன்ற உத்தரவு! ஈஷா யோகா மையத்தில் கோவை எஸ்.பி., அதிகாரிகள் நேரில் விசாரணை!

இந்தக் காந்தி கோயிலில் உயர்ந்த கோபுரத்துடன் 6 அடி உயரத்தில் காந்திக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, 1985 இல் அப்போதைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இக் கோயிலை திறந்து வைத்தார். கோயில் வளாகத்தில் காந்தி இறந்த அன்று நடைபெற்ற ஊர்வலக் காட்சிகளின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில், காந்தி பிறந்த நாள், நினைவு நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் முக்கிய தேசத் தலைவர்கள் பிறந்த நாளில் சிறப்புப் பூஜைகளும், சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்லாமல் குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

Read Entire Article