விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் பாலா. காமெடி ஷோ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை காட்டிலும் பிறருக்கு உதவி செய்யும் எண்ணத்தால் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் பாலா. பிறரிடம் இருந்து பணம் வாங்கி உதவி செய்வதை காட்டிலும், தனது சொந்த பணத்தில் உதவி தேவைப்படுவோருக்கு தேடித்தேடி போய் உதவி செய்கிறார். இந்த உயரிய எண்ணம் தான் அனைவரைாலும் நேசிக்க வைத்துள்ளது. மக்களுக்கு பிடித்த நபராகவும் பாலா மாறியுள்ளார்.

பாலா படத்திற்கு பாராட்டு

இந்நிலையில், இவரது நடிப்பில் உருவாகியுள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரை பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள் பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இதில், ஒரு சிலர் பாலாவுக்காக படம் பார்க்க வந்தேன் என்று கூறி கண் கலங்கும் காட்சிகளும் அரங்கேறியிருக்கிறது. இதனிடையே , காந்தி கண்ணாடி பட இயக்குநர் ஷெரிப் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது படத்திற்கு பலர் தடங்கல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

காந்தி கண்ணாடி ஷோ இல்லை

இதுகுறித்து பேசிய அவர், காந்தி கண்ணாடி படத்திற்கு ஷோ இல்லைனு சொல்லி போன் வருகிறது. ஏன் எதற்கு என்று தெரியவில்லை. சில தியேட்டரில் பேனர் கூட வைக்க விடமாட்றாங்க. வைத்த பேனர்களை கிழிக்கிறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியலை. சார் நான் வந்து 50 பைசா 1 ரூபாய்க்கு போஸ்டர் ஒட்டுன பையன். பாலா காரைக்காலில் இருந்து சினிமா கனவோடு ஓடி வந்த பையன் சார். ஏன் அடிக்குறாங்க, எதுக்கு அடிக்கிறாங்க தெரியல. சாத்தியமா புரியல. இதுக்கு செலவு செய்யும் பணத்தை வேறு எதுக்காவது நல்ல விஷயத்திற்கு செலவு பண்ணலாம். எங்கள அடிக்கணும்னு தோணுச்சுனா நேரல வந்து செவுல ரெண்டு அடி கூட அடிச்சிட்டு போங்க. படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துருக்காங்க. மக்களுக்கு ரொம்ப நன்றி என கூறியுள்ளார்.