Free Electric Stove: அனைவருக்கும் இலவச மின்சார அடுப்பு.? தமிழக மக்களுக்கு வெளியாகப்போகுது சூப்பர் அறிவிப்பு

1 month ago 5
ARTICLE AD

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக, தவெக போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் கடந்த காலங்களில் டிவி, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தயாராகி வரும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமை தொகை ரூபாய் 2000 உயர்வு, கல்வி கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர் என அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஈரானில் நடைபெற்று வரும் போர் தமிழகத்திலும் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இறுதியில் அமெரிக்கா- இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக ஈரானும் வளைகுடா நாடு மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரான் போர்- கச்சா எண்ணெய் தட்டுப்பாடு

சவூதி, துபாய்,பக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் விமான போக்குவரத்து சேவையும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுவரப்படுகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் வரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல்,டீசல் விலையானது உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சமையல் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது. அடுத்தாக தமிழகத்திலும் ஓட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. மேலும் வணிக சிலிண்டர் எரிவாயு நிரப்பும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் மின்சார அடுப்பு

தற்போது வீட்டிற்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மட்டுமே விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதுவும் இன்னும் 3 வார காலத்திற்கு மட்டுமே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில்  தற்போது உள்ள சூழலில் இலவச மின்சார அடுப்பும் முக்கிய தேவையாக இருப்பதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதியில் இலவச மின்சார அடுப்பு முக்கிய இடத்தை பிடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விரைவில் வெளியாகவுள்ள அதிமுக மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார அடுப்பு தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

Read Entire Article